»   »  விருதுகள்

விருதுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிம்ரனுக்கு சிறந்த நடிகை விருது தரப்பட இருந்தது.

ஆனால், அவர் சொந்தக் குரலில் பேசாத காரணத்தால், விருதை தவற விட்டுவிட்டார்.

50-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மணிரத்தினம் தயாரித்து, இயக்கியகன்னத்தில் முத்தமிட்டால் படம் 6 விருதுகளை அள்ளிச் சென்றுள்ளது.

இந் நிலையில் விருதுக் குழுவில் இடம் பெற்றிருந்த அலெக்ஸ் என்பவர் கூறுகையில், சிம்ரனுக்கு சிறந்தநடிகைக்கான விருது கிடைத்திருக்கும்.

ஆனால் அவர் சொந்தக் குரலில் பேசாத காரணத்தால் விருது தட்டிப் போய்விட்டது.

தேசிய விருதுகள் விதிப்படி சொந்தக் குரலில் பேசி நடித்தால்தான் விருது கிடைக்கும்.

இதேபோல, துணை நடிகர் விருதுக்கு மாதவன், சந்திரசேகர், அதுல் குல்கர்னி ஆகியோருக்கிடையே போட்டிஏற்பட்டது. கடைசியில் சந்திரசேகர் வெற்றி பெற்றார் என்றார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil