twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷன் விருது... குடியரசுத் தலைவர் கையால் எஸ்.பி சரண் விருதை பெற்றார்!

    |

    டெல்லி : டெல்லியில் 2வது நாளாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார்

    மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. எஸ்.பி.பி சார்பில் எஸ்.பி.சரண் விருதை பெற்றுக்கொண்டார்

    மேலும், தமிழகத்தைச் சேர்ந்த சாலமன் பாப்பையா, தமிழக வீராங்கனை அனிதா உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருது வழங்கினார்.

    மலையாள ஒடிடி நாயகனாக மாறிய மோகன்லால்.. அடுத்த 5 படமும் தியேட்டரில் இல்லையாம்!மலையாள ஒடிடி நாயகனாக மாறிய மோகன்லால்.. அடுத்த 5 படமும் தியேட்டரில் இல்லையாம்!

    பத்ம விருதுகள்

    பத்ம விருதுகள்

    கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. 2020ஆம் ஆண்டு 141 பேருக்கும், 2021-ஆம் ஆண்டில் 119 பேருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.

    கொரோனாவால் தாமதம்

    கொரோனாவால் தாமதம்

    கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று 2020ம் ஆண்டு பத்ம விருது பெற்றவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில், இந்தி நடிகை கங்கனா ரணாவத், பிசி சிந்து உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

    எஸ்பிபிக்கு பத்ம விபூஷண்

    எஸ்பிபிக்கு பத்ம விபூஷண்

    இதையடுத்து, 2வது நாளான இன்று 2021ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், தமிழ் மக்களின் மனம் கவர்ந்த மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியனுக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருதை எஸ்பிபியின் மகன் எஸ்பிசரண் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டார். எஸ்பிபியின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.

    40 ஆயிரம் பாடல்கள்

    40 ஆயிரம் பாடல்கள்

    சினிமா பாடல்கள், பக்தி பாடல்கள் என மொத்தம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எஸ்பிபி பாடியுள்ளார். அதே நேரம் அவரது நடிப்பு திறமையையும் நம்மால் புறம் தள்ளிவிட முடியாது. கேளடி கண்மணி தொடங்கி குணா, திருடா திருடா, காதலன் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்து நடிப்பிலும் அசத்தியிருப்பார்.

    Recommended Video

    பாடும் நிலா SPB முதலாமாண்டு நினைவு தினம் | SPB -ன் மலரும் நினைவுகள்
    அண்ணாத்த பாடல்

    அண்ணாத்த பாடல்

    ரஜினியின் அனைத்து திரைப்படங்களிலும் வரும் ஓப்பனிங் பாடலை எஸ்பிபி தான் பாடியிருப்பார். இறுதியாக அண்ணாத்த திரைப்படத்தில் இவர் பாடிய அண்ணாத்த பாடலை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடினார்கள். அதேபோல கமல்ஹாசனின் தெலுங்கு திரைப்படங்களில் அவருக்கு வாய்ஸ் கொடுத்தவர் எஸ்பிபி! ரஜினிக்கும் சரி, கமலுக்கும் சரி, எஸ்பிபியின் குரல் மிகவும் கச்சிதமாகப் பொருந்தும்.

    English summary
    SP Balasubrahmanyam receives Padma Vibhushan posthumously, son SP Charan collects it.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X