twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோல்டன் குளோப் விருதை புறக்கணித்த Squid Game நடிகர் லீ ஜுங் ஜே.. என்ன காரணம் தெரியுமா?

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் இந்த ஆண்டு வெளியான Squid Game வெப் தொடர் உலகளவில் ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய ஹிட் அடித்தது.

    அந்த வெப் தொடரில் லீடு ரோலில் நடித்து தனது நடிப்பால் மிரட்டிய தென் கொரிய நடிகர் லீ ஜுங் ஜே (Lee Jung Jae) கோல்டன் குளோப் விருது விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளது உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வெறும் 3 லட்சம் தானா...பெட்டி கொண்டு வந்தவர் சம்பளத்தை விட குறைவா இருக்கே வெறும் 3 லட்சம் தானா...பெட்டி கொண்டு வந்தவர் சம்பளத்தை விட குறைவா இருக்கே

    ஏற்கனவே கோல்டன் குளோப் விருதுகள் மீது ஏகப்பட்ட இன பாகுபாடு சர்ச்சைகள் எழுப்பப்பட்டுள்ள நிலையில், லீ ஜுங் ஜே ஏன் இந்த விருது விழாவை புறக்கணித்துள்ளார்? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

    கோல்டன் குளோப் 2022

    கோல்டன் குளோப் 2022

    1944ம் ஆண்டு தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 77 ஆண்டுகள் நடைபெற்று வரும் ஒரு பெரிய விருது விழா தான் கோல்டன் குளோப். ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக உலகமே பெரிதும் உற்று நோக்கக் கூடிய ஒரு விருது விழாவாக கோல்டன் குளோப் உள்ளது. வரும் ஜனவரி 10ம் தேதி கோல்டன் குளோப் 2022 விருது விழா நடைபெறுகிறது.

    விருது போட்டியில் ஸ்க்விட் கேம்

    விருது போட்டியில் ஸ்க்விட் கேம்

    கொரிய வெப் சீரிஸான ஸ்க்விட் கேம் கோல்டன் குளோப் விருது விழாவில் டிவி தொடர்களுக்கான பிரிவுகளில் அதிக இடங்களில் இடம்பிடித்து இருக்கிறது. நெட்பிளிக்ஸில் கடந்த ஆண்டு வெளியான இந்த வெப் தொடர் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஹுவாங் டோங் ஹுயூக் இதனை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

    புறக்கணித்த நடிகர்

    புறக்கணித்த நடிகர்

    ஸ்க்விட் கேம் தொடரில் நடித்த பிரபல கொரிய நடிகர் லீ ஜுங் ஜே கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தற்போது அதிரடியாக தான் இந்த விருது விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

    இனவெறி பிரச்சனை

    இனவெறி பிரச்சனை

    ஏற்கனவே கோல்டன் குளோப் விருது விழாவில் கருப்பினத்தவர்களை அதிகளவில் புறக்கணித்து வருவதாக எழுந்த சர்ச்சையில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த விருது விழாவை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தன. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஒடிடியில் வெளியான ஸ்க்விட் கேம் தொடரில் நடித்த நடிகரும் புறக்கணித்து இருப்பது பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    கொரோனா காரணமாக

    கொரோனா காரணமாக

    உலகளவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் சூழலில் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருது கொடுக்கும் விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதே கொரோனாவை காரணம் காட்டியே தற்போது லீ ஜுங் ஜே கோல்டன் குளோப் விருதினை புறக்கணித்து இருப்பதாக கூறப்படுகிறது.

    English summary
    'Squid Game' fame actor Lee Jung Jae confirms he will not attend the upcoming Golden Globes 2022 due to Corona Pandemic.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X