»   »  ஐஐஎப்ஏ உத்சவம்: பாகுபலி, தனி ஒருவனை வீழ்த்திய 'ரங்கிதரங்கா'

ஐஐஎப்ஏ உத்சவம்: பாகுபலி, தனி ஒருவனை வீழ்த்திய 'ரங்கிதரங்கா'

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடந்து முடிந்த ஐஐஎப்ஏ விருது வழங்கும் விழாவில் அதிக விருதுகளைப் பெற்ற படம் என்ற பெருமையை மகேஷ்பாபுவின் ஸ்ரீமந்துடு மற்றும் கன்னடப்படமான ரங்கிதரங்கா ஆகியவை தட்டிச் சென்றுள்ளன.

ஐஐஎப்ஏ உத்சவம் என்ற பெயரில் இந்த வருடம் தென்னிந்தியத் திரைக் கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக சிறந்த நடிகர், நடிகை, இசையமைப்பாளர் என்று மொத்தம் 12 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனி ஒருவன்,பாகுபலியை விட ரங்கிதரங்கா மற்றும் ஸ்ரீமந்துடு ஆகிய படங்கள் அதிக விருதுகளைப் பெற்று சாதனை படைத்தது.

ஐஐஎப்ஏ உத்சவம்

ஐஐஎப்ஏ உத்சவம்

இந்தியாவில் பாலிவுட் கலைஞர்களை மட்டும் முன்னிலைப்படுத்தி சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள்(ஐஐஎப்ஏ) இதுநாள்வரை வழங்கப்பட்டு வந்தன. இந்த வருடம் முதல் தென்னிந்திய கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடந்து முடிந்திருக்கிறது.

ரங்கிதரங்கா

ரங்கிதரங்கா

இந்த விழாவில் முதன்முறையாக சாண்டல்வுட்டில் இருந்து தேர்வான ரங்கிதரங்கா திரைப்படம் 6 விருதுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தது.
புதுமுகங்கள் நிரூப் பண்டாரி, அவந்திகா ஷெட்டி, ராதிகா சேத்தன் மற்றும் சீனியர் நடிகர் சாய்குமார் ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் கன்னட திரைப்படம் தான் இந்த ரங்கிதரங்கா.

6 விருதுகள்

6 விருதுகள்

படம் வெளியான புதிதில் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சாதனைகளை ரங்கிதரங்கா படைத்தது.தற்போது விருதுகளையும் கைப்பற்றி இருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. சிறந்த படம்(பிரகாஷ்), துணை நடிகர்(சை குமார்), வில்லன்(அரவிந்த் ராவ்), சிறந்த பாடலாசிரியர்(அனூப் பந்தாரி), சிறந்த இசையமைப்பாளர்(அனூப் பந்தாரி) மற்றும் சிறந்த இயக்குநர்(அனூப் பந்தாரி) ஆகிய 6 பிரிவுகளில் இப்படம் விருதுகளை வாரிக் குவித்தது.

ஸ்ரீமந்துடு

ஸ்ரீமந்துடு

இதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் சஸ்ரீமந்துடு திரைப்படம் சிறந்த நடிகர்(மகேஷ்பாபு), சிறந்த நடிகைசுருதிஹாசன்), சிறந்த துணை நடிகர்(ஜெகபதி பாபு), சிறந்த இசையமைப்பாளர்(தேவி ஸ்ரீ பிரசாத்), சிறந்த பாடலாசிரியர்(ராமஜோகையா சாஸ்திரி) மற்றும் சிறந்த பின்னணிப்பாடகர் (சாகர்) ஆகிய 6 விருதுகளை வென்றது.

பாகுபலிக்கு 5

பாகுபலிக்கு 5

சிறந்த படம், சிறந்த துணை நடிகர்(சத்யராஜ்) சிறந்த துணை நடிகை(ரம்யா கிருஷ்ணன்), சிறந்த வில்லன்(ராணா டகுபதி) மற்றும் சிறந்த பின்னணிப்பாடகி(சத்யா யாமினி) ஆகிய 5 பிரிவுகளில் இப்படம் விருதுகளைக் கைப்பற்றியது.

தனி ஒருவன்

தனி ஒருவன்

2015 ன் மாபெரும் வெற்றிப்படமாக மாறிய தனி ஒருவன் திரைப்படம் சிறந்த நடிகர்(ஜெயம் ரவி), சிறந்த வில்லன்(அரவிந்த் சாமி) ஆகிய 2 பிரிவுகளில் விருதுகளை வென்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகுபலி, தனி ஒருவன் படங்களை விட கன்னடப்படமான ரங்கிதரங்கா விருதுகளை வாரிக் குவித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

English summary
IIFA UTSAVAM: Mahesh Babu's Srimanthudu and Sandalwood movie Rangitaranga both movies Bagged 6 Awards in this Function.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil