»   »  கேபிள் பிரச்சனை: குட்டி சிங்கத்தின் ஆஸ்கர் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் தவித்த தாய்

கேபிள் பிரச்சனை: குட்டி சிங்கத்தின் ஆஸ்கர் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் தவித்த தாய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: 8 வயது சன்னி பவார் ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொண்டதை உலகமே பார்த்து ரசிக்க கேபிள் இணைப்பு பிரச்சனையால் அவரது தாய் மற்றும் குடும்பத்தாரால் பார்க்க முடியாமல் போனது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சான்டாக்ரூஸ் பகுதியில் உள்ள சேரியில் வசித்து வருபவர் சன்னி பவார்(8). அவர் 6 ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட லயன் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.

இதையடுத்து அவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொண்டார்.

ஆஸ்கர்

ஆஸ்கர் விழாவில் கலந்து கொண்டு சிவப்புக் கம்பளத்தில் நடந்த மிக இளம் இந்திய நடிகர் சன்னி பவார். பாலிவுட் பிரபலங்கள் எல்லாம் ஆஸ்கர் விழாவை நினைத்து கனவு காணும்போது சன்னி அந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

சன்னி பவார்

சன்னி பவார்

ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்கிய ஜிம்மி கெம்மல் சன்னியை தூக்கி பார்வையாளர்கள் அனைவருக்கும் காண்பிக்க அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

சன்னி பவார் ஆஸ்கர் விழாவில் அசத்தியதை உலகமே டிவியில் பார்த்து ரசித்துள்ளது. ஆனால் அவரின் தாயால் அதை பார்த்து மகிழ முடியாமல் போனது.

கேபிள்

கேபிள்

சன்னியின் வீட்டில் உள்ள கேபிள் இணைப்பில் ஏதோ பிரச்சனையாக ஆஸ்கர் விழாவை அவரது தாயால் பார்க்க முடியவில்லை. சன்னி குடும்பத்தார் இன்னும் லயன் படத்தையும் பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
As the whole world watched adorable Sunny Pawar at Oscars, his mother missed it out because of faulty cable connection.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil