»   »  தேசிய விருதுகள் 2016... தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு 7 விருதுகள்!

தேசிய விருதுகள் 2016... தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு 7 விருதுகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டும் கணிசமான தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. மொத்தம் 5 விருதுகளை தமிழ் சினிமா பெற்றுள்ளது இந்த ஆண்டு.

இரு மொழிப் படம் என்ற வகையில் பாகுபலியையும் சேர்த்தால் மொத்தம் 7 விருதுகள்.

விசாரணை

விசாரணை

வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை படத்துக்கு சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான விருது கிடைத்துள்ளது.

சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி

அதே படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சமுத்திரக்கனிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

சிறந்த எடிட்டர்

சிறந்த எடிட்டர்

விசாரணை படத்துக்காக உயிரைக் கொடுத்து உழைத்த மறைந்த டி இ கிஷோருக்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருது கிடைத்துள்ளது.

சிறப்பு விருது

சிறப்பு விருது

சிறந்த நடிப்புக்கான சிறப்பு விருதினை ரித்திகா சிங் பெற்றுள்ளார். இறுதிச் சுற்று படத்தில் நடித்ததற்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது.

சிறந்த இசையமைப்பாளர்

சிறந்த இசையமைப்பாளர்

1000 படங்களுக்கு இசையமைத்துச் சாதனைப் புரிந்த இளையராஜாவுக்கு, அவரது ஆயிரமாவது படமான தாரை தப்பட்டைக்காக தேசிய விருது கிடைத்துள்ளது. அந்தப் படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக இந்த விருதினை அவர் பெறுகிறார்.

பாகுபலி

பாகுபலி

பாகுபலி தெலுங்குப் படம் என்றாலும், அது தமிழிலும் நேரடிப் படமாகவே வெளியானது. அந்தப் படத்துக்கு தேசிய அளவில் சிறந்த படத்துக்கான விருதும், சிறந்த கிராபிக்ஸுக்கான விருதும் கிடைத்துள்ளது.

இந்த இரு விருதுகளையும் சேர்த்தால் மொத்தம் 7 விருதுகளை தமிழ் சினிமா அள்ளியுள்ளதாக பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

English summary
This year Tamil Cinema has bagged 7 National awards including best background score.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil