»   »  'விசாரணை'க்கு முன்பு ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ் படங்கள் எவை எவை?

'விசாரணை'க்கு முன்பு ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ் படங்கள் எவை எவை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விசாரணை தவிர்த்து இதுவரை 8 தமிழ் படங்கள் ஆஸ்கர் விருது தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதில் 5 படங்கள் கமல் ஹாஸன் நடித்தவை ஆகும்.

வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படம் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்தியத் திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் கேத்தன் மேத்தா, இந்த ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பிரிவு போட்டிக்கு, இந்தியாவில் இருந்து 'விசாரணை' தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய மொழிகளில் வெளியான 29 படங்கள் அடங்கிய தேர்வு பட்டியலில் இருந்து 'விசாரணை' படம் இறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர்

ஆஸ்கர்

16 ஆண்டுகள் கழித்து ஆஸ்கருக்கு செல்லும் தமிழ் படம் விசாரணை. முன்னதாக 2000ம் ஆண்டு உலக நாயகன் கமல் ஹாஸன் நடித்த ஹேராம் படம் ஆஸ்கருக்கு சென்றது.

தெய்வமகன்

தெய்வமகன்

ஏ.சி. திரிலோகசந்தர் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மூன்று கதாபாத்திரங்களில் நடித்த தெய்வமகன்(1969) படம் தான் முதன்முதலில் ஆஸ்கருக்கு சென்ற தமிழ் படம் ஆகும்.

நாயகன்

நாயகன்

தெய்வமகனை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன் நடித்த நாயகன்(1987) படம் ஆஸ்கருக்கு சென்றது. அதன் பிறகு மணிரத்னம் குழந்தைகளை வைத்து இயக்கிய அஞ்சலி(1990) ஆஸ்கர் விருது தேர்வு பட்டியலில் இடம்பெற்றது.

இந்தியன்

இந்தியன்

கமல் ஹாஸன் நடித்த தேவர் மகன்(1992), பி.சி. ஸ்ரீராம் இயக்கத்தில் கமல், அர்ஜுன் நடித்த குருதிப்புனல்(1995), ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன்(1996), ஷங்கரின் ஜீன்ஸ்(1998), கமலின் ஹேராம்(2000) ஆகியவை ஆஸ்கருக்கு சென்ற தமிழ் படங்கள் ஆகும். இதுவரை ஆஸ்கருக்கு சென்ற தமிழ் படங்களில் (விசாரணையையும் சேர்த்து)9 படங்களில் 5 கமல் நடித்தவை ஆகும்.

English summary
So far eight tamil movies excluding Visaranai have gone for Oscars. Out of eight, 5 were Kamal Haasan starrer movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil