»   »  இதோ இன்னுமொரு ஆஸ்கர் தமிழர்!

இதோ இன்னுமொரு ஆஸ்கர் தமிழர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகள் பிரிவில் அமெரிக்க வாழ் தமிழரான கொட்டலாங்கோ லியோன், ஆஸ்கர் பரிசைப் பெற்றுள்ளார்.

அவருக்கு இந்த விருது பிப்ரவரி 13 அன்றே வழங்கப்பட்டுவிட்டது. இந்த செய்தி தாமதமாகவே ஊடகங்களுக்குத் தெரிய வந்தது.

சர்வதேச அளவில் மிக உயர்ந்ததாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் இரு தினங்களுக்கு முன் வழங்கப்பட்டன.

அந்த மேடையில் லியோனிக்கு இந்த விருது வழங்கப்படவில்லை. அதற்கு முன்பே தொழில்நுட்ப சாதனைக்கு தரப்படும் விருது நிகழ்வில் லியோனி கவுரவிக்கப்பட்டார்.

itview என்கிற சோனி நிறுவனத்தின் மென்பொருள் உருவாக்கத்தில் பங்கேற்றதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அந்த மென்பொருள், திரைத்துறையினருக்கு மிகவும் பயன்தரக்கூடியதாக உள்ளதால் இந்தப் பெருமை லியோனுக்குக் கிடைத்துள்ளது.

லியோன், தூத்துக்குடியில் பிறந்து கோயம்புத்தூரில் வளர்ந்தவர். 7-வது வரை அரசுப் பள்ளியில் படித்தவர். 1988 முதல் 1992 வரை கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் என்ஜினியரிங் படித்தார். டெல்லியில் இரண்டு வருடங்கள் பணிபுரிந்தவர் பிறகு 1994-ல், கிராபிக்ஸ் துறையின் மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். ஸ்பைடர் மேன், மென் இன் பிளாக் உள்ளிட்ட பல படங்களில் அவர் பணிபுரிந்துள்ளார்.

ஆஸ்கர் விருதுகள் நேற்று வழங்கப்பட்டதையடுத்து லியோனின் சாதனை மீண்டும் கவனத்துக்கு வந்துள்ளது.

லியோனின் தாயாரும் சகோதரரும் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார்கள். இந்த ஆஸ்கர் விருதுக்குச் சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும்.

விருதினைப் பெற்றதும் ஆங்கிலத்தில் ஏற்புரையாற்றிய லியோனி, இறுதியில் எல்லாருக்கும் நன்றி என தமிழில் கூறி முடித்தார்.

Read more about: oscar award ஆஸ்கர்
English summary
The 44-year-old technician of Tamil roots Cottalango Leon has been chosen for this year's Oscar for scientific and technical achievement.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil