Just In
- 20 min ago
நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி
- 29 min ago
சேலையில் பின்னழகை காட்டி சுண்டி இழுக்கும் தமிழ் நடிகை!
- 45 min ago
2 வருடத்துக்குப் பிறகு ஷூட்டிங்.. இயக்குனர், உதவி இயக்குனர் திடீர் மோதல்.. பிரபல ஹீரோ அப்செட்!
- 49 min ago
ஸ்டைலா கெத்தா மாஸா கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட டிராவலிங் டைரிஸ் புகைப்படங்கள்!
Don't Miss!
- Sports
ஓரமாக உட்கார்ந்து இருந்தேன்.. உங்கள் டீமை விட்டு போனதே சந்தோசம்.. ஐபிஎல் அணியை வெளுத்த இளம் வீரர்
- News
5 கிலோ தங்க கட்டி, ரூ.100 கோடி அன்னிய முதலீடு.. பால் தினகரன் நேரில் ஆஜராக வருமான வரித்துறை நோட்டீஸ்
- Automobiles
ஸ்ட்ரீட் 750 பைக்குகளின் விற்பனை நிறுத்தம்!! விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக் இனி இதுதான்...
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 23.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தல அஜித்துக்கு தாதாசாகேப் பால்கே விருது.. தனுஷ், பார்த்திபன் என தமிழில் விருது குவித்தவர்கள் இதோ!
சென்னை: 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது வெற்றியாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாவில் சிறப்பான பங்காற்றிய கலைஞர்களுக்கு இந்திய சினிமாவின் தந்தை என போற்றப்படும் தாதாசாகேப் பால்கே விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகர் அஜித், தனுஷ், பார்த்திபன், ஜோதிகா உள்ளிட்டோர் இந்த விருதை வென்றுள்ளனர்.
சமூக வலைதள பதிவுகளை திடீரென அழித்த தீபிகா படுகோனே.. புத்தாண்டை முன்னிட்டு ஆடியோ.. என்ன ஆச்சு?

சிறந்த திரைப்படம் – டுலெட்
2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது விழா தென்னிந்திய சினிமா மற்றும் வட இந்திய சினிமாவுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தாதாசாகேப் விருதை டூலெட் திரைப்படம் தட்டிச்சென்றுள்ளது. இயக்குநர் செழியன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ஏற்கனவே தேசிய விருதையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகர் – தனுஷ்
தேசிய விருதுக்கு இணையாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். தனுஷ் ரசிகர்கள் இந்த சந்தோஷ தருணத்தை கொண்டாடி வருகின்றனர்.

சிறந்த நடிகை – ஜோதிகா
இயக்குநர் கெளதம் ராஜ் இயக்கத்தில் 2019ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான ஜோதிகாவின் ராட்சசி திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஜோதிகா சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார். யாருக்கும் அசராத அரசு பள்ளி தலைமை ஆசிரியராக ஜோதிகா துணிச்சலாக நடித்திருப்பார்.

சிறந்த இயக்குநர் – பார்த்திபன்
சிறந்த இயக்குநருக்கான தாதாசாகேப் பால்கே விருதை இயக்குநர் பார்த்திபன் வென்றுள்ளார். ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் விமர்சகர்களால் பாராட்டுக்களை பெற்றது. கோல்டன் குளோப் உள்ளிட்ட சர்வதேச விருது விழாக்களில் திரையிடவும் தேர்வான சிறப்புகளை அள்ளிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த இசையமைப்பாளர் – அனிருத்
சிறந்த இசையமைப்பாளருக்கான தாதாசாகேப் பால்கே விருதை ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரன் வென்றுள்ளார். அனிருத் இசையமைத்த ஏகப்பட்ட படங்கள் 2019ம் ஆண்டு வெற்றிப் பெற்ற நிலையில், அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இந்த ஆண்டும் ஏகப்பட்ட பெரிய படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

தல அஜித்துக்கு தாதாசாகேப் விருது
சிறந்த பல்துறை (வெர்சடைல்) நடிகருக்கான தாதாசாகேப் விருதை தல அஜித் தட்டிச் சென்றுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு அஜித் நடிப்பில் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை என இரு படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தல அஜித்துக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெறிக்க விட்டு வருகின்றனர்.