Don't Miss!
- News
எங்கள் வேட்பாளர் ரெடி.. ‘ஆப்ஷன் 2’.. அதுக்குதான் ஓபிஎஸ் ‘வெய்ட்’ பண்றார்.. போட்டு உடைத்த புகழேந்தி!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
11 எம்மி விருதுகளை குவித்த தி க்ரவுன்... சிறந்த நடிகைக்கான விருதை தட்டிச்சென்றார் ஒலிவியா கோல்மென்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: தி க்ரவுன் டிராமா சீரிஸ் 11 எம்மி விருதுகளை குவித்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 73வது எம்மி விருது விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
போட்றா
விசில...நாளை
வெளியாகிறதா
வலிமை
டீசர்
?
சிவப்பு கம்பள வரவேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

11 விருதுகளை குவித்த தி க்ரவுன்
இந்த விருது நிகழ்ச்சி தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே தி க்ரவுன் டிராமா சீரிஸ், சிறந்த சீரிஸ்க்கான விருது உட்பட 11 விருதுகளை குவித்தது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட பீரியட் நாடகமான தி கிரவுன் அதிகளவாக 11 விருதுகளை குவித்து சாதனை படைத்துள்ளது.

சிறந்த நடிகைக்கான விருது
தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தி க்ரவுன் டிராமா சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ராணி எலிசபெத் வேடத்தில் நடித்ததற்காக ஒலிவியா கோல்மேன் நாடகத் தொடரின் சிறந்த முன்னணி நடிகைக்கான விருதை பெற்றார்.

ராணி இரண்டாம் எலிசபெத்
தி ஆடியன்ஸ் என்ற ஸ்டேஜ் டிராமாவை அடிப்படையாக கொண்டு தொடங்கப்பட்டது தி க்ரவுன் டிவி சீரிஸ். இந்த சீரிஸ் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் ராஜ குடும்பத்தை மையப்படுத்தி இந்த சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

நெட்பிளிக்ஸ் தளம்
இந்த சீரிஸ் சோனி பிக்சர்ஸ் டெலிவிஷன் மற்றும் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் முதல் சீசனில் ராணி எலிசபெத் மற்றும் பிலிப்பின் திருமணம் இடம் பெற்றது. மேலும் அவரது தங்கை இளவரசி மார்க்ரேட்டின் நிச்சயதார்த்தமும் இடம் பெற்றது.

தி க்ரவுன் - 2வது சீசன்
இரண்டாவது சீசனில் பிரதமர் ஹரோல்ட் மேக்மில்லனின் ஓய்வு மற்றும் 1964 இல் இளவரசர் எட்வர்டின் பிறப்பு வரையிலான காட்சிகள் இடம்பெற்றிருந்தது. மூன்றாவது சீசன் 1964 முதல் 1977 வரை, ஹரோல்ட் வில்சன் இரண்டு முறை பிரதமராக இருந்தது காட்டப்பட்டது. மூன்றாவது சீசனில் கமிலா ஷாண்ட் அறிமுகப்படுத்தப்பட்டார்.

லேடி டயானா ஸ்பென்சர் திருமணம்
நான்காவது சீசன் 1979 முதல் 1990 களின் முற்பகுதி வரை காட்சிப்படுத்தியிருந்தது. மேலும் மார்கரெட் தாட்சர் பிரதமராக இருந்த காலம் மற்றும் இளவரசர் சார்லஸின் லேடி டயானா ஸ்பென்சருடன் திருமணம், ராணி இரண்டாம் எலிசபெத்தின் ஆட்சி ஆகிய நிகழ்வுகளை கொண்டிருந்தது.

சிறந்த நடிகருக்கான விருது
மேலும் க்ரவுன் சீரிஸ், சிறந்த எழுத்து, சிறந்த இயக்கம், சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த முன்னணி நடிகை, சிறந்த முன்னணி நடிகர், சிறந்த டிராமா சீரிஸ் என மொத்தம் 11 விருதுகளை குவித்துள்ளது. சிறந்த நடிகருக்கான விருது ஜோஷ் ஓ கோன்னருக்கு வழங்கப்பட்டது.