»   »  'அப்பா' படத்திற்காக.. இயக்குநர் சமுத்திரக்கனிக்கு 'மணிவண்ணன்' விருது!

'அப்பா' படத்திற்காக.. இயக்குநர் சமுத்திரக்கனிக்கு 'மணிவண்ணன்' விருது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாய் வால், திரைப்பட இயக்கம் சார்பில், இயக்குநர் மணிவண்ணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த திரைப்பட நடிகரும், இயக்குநருமான மணிவண்ணன் பெயரில், கோவையைச் சேர்ந்த நாய் வால் திரைப்பட இயக்கம் என்ற அமைப்பு கடந்த 2 ஆண்டுகளாக விருது வழங்கி வருகிறது. அதன்படி, 3ம் ஆண்டு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு கோவை ஆர்.எஸ்.புரம் அன்ன பூர்ணா கலையரங்கில் நடைபெறுகிறது.

This year Manivannan awards announced

இதில், அப்பா திரைப்படத்துக்காக இயக்குநர் சமுத்திரகனிக்கும், பார்த்தீனியம் நாவலுக்காக கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் தமிழ்நதிக்கும் விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விழாவில், எழுத்தாளர் பாமரன், மணிவண்ணனின் உதவியாளர் ரங்கநாதன், மருத்துவர் பெரியார் செல்வி, கவிஞர் பாபு, நடிகர் நமோ நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். விழா ஏற்பாடுகளை, நாய் வால் திரைப்பட இயக்கத்தின் செயலர் பெ.மயில்வண்ணன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

English summary
This year Manivannan awards to be given to director Samudrakani and writter Tamilnadhi.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil