»   »  மகளிர் காங்கிரஸ் மாநாட்டில் நடிகைகள் கே.ஆர். விஜயா, மீனாவுக்கு விருது

மகளிர் காங்கிரஸ் மாநாட்டில் நடிகைகள் கே.ஆர். விஜயா, மீனாவுக்கு விருது

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடலூர்: இந்திரா காந்தி நூற்றாண்டையொட்டி தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கடலூரில் நடந்த மாநில மகளிர் மாநாட்டில் நடிகைகள் கே.ஆர். விஜயா, மீனா ஆகியோருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்திரா காந்தி நூற்றாண்டையொட்டி தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கடலூரில் மாநில மகளிர் மாநாடு நடத்தப்பட்டது. மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த மாநாட்டுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யசோதா தலைமை வகித்தார்.

TN congress honours KR Vijaya, Meena

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் சந்திரசேகரன், தொழில் அதிபர் மணிரத்தினம், சாய்லட்சுமி, கரோலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டு கொடியை தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் நடிகைகள் கே.ஆர். விஜயா, மீனா ஆகியோருக்கு இந்திரா காந்தி விருதும், தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

விருது மற்றும் தங்கப் பதக்கங்களை புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி வழங்கினார். பிற்பகல் 3 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இந்த மாநாட்டில் சின்னத்திரை நடிகைகளும் கவுரவிக்கப்பட்டனர்.

English summary
Actresses KR Vijaya and Meena were honoured at the TN congress conference held in Cuddalore.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil