»   »  1999-ம் ஆண்டு தமிழக அரசு திரைப்பட விருதுகள்

1999-ம் ஆண்டு தமிழக அரசு திரைப்பட விருதுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசின் சிறந்த நடிகராக ரஜினிகாந்த்தும், சிறந்த நடிகையாக சிம்ரனும், சிவாஜிகணேசன் விருது நடிகர் கமல்ஹாசனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விருதுகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

1999-ம் ஆண்டுக்கான கலைத்துறை வித்தகர்கள் திரைப்பட விருதுகள்அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகராக ரஜினிகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.நடிகர் கமலஹாசனுக்கு சிவாஜிகணேசன் விருது வழங்கப்படும்.

சிறந்த நடிகையாக சிம்ரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இயக்குனர் ஷங்கருக்கு ராஜாசாண்டோ விருதும், நடிகர் விஜய்க்கு எம்.ஜி.ஆர். விருதும் வழங்கப்படுகிறது.

சிறந்த இயக்குனருக்கான விருது சேது பாலாவுக்கும், சிறந்த இசையமைப்பாளர் விருதுஏ.ஆர். ரஹ்மானுக்கும் வழங்கப்படுகிறது.

விருதுகளை அடுத்த மாதம் 12-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும்விழாவில் முதல்வர் கருணாநிதி வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருது பெற்றோர் பட்டியல்:

கலைத்துறை வித்தகர்களுக்கான விருதுகள்:

அறிஞர் அண்ணா விருது : இயக்குநர் ஜெ. மகேந்திரன்

கலைவாணர் விருது : காகா ராதா கிருஷ்ணன்

ராஜா சாண்டோ விருது : முதல்வன் திரைப்பட இயக்குநர் ஷங்கர்

எம்.ஜி.ஆர். விருது: நடிகர் விஜய்

கவிஞர் கண்ணதாசன் விருது : கவிஞர் காமகோடியான்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விருது : கமல்ஹாசன்

தியாகராஜ பாகவதர் விருது : எஸ்.எஸ். ராஜேந்திரன்

சிறந்த படம் முதல் பரிசு : படையப்பா.

சிறந்த நடிகர், நடிகை. தொழில் நுட்பக் கலைஞர்கள் விருதுகள்:

சிறந்த நடிகர்: ரஜினிகாந்த் (படையப்பா)

சிறந்த நடிகை: சிம்ரன் ( துள்ளாத மனமும் துள்ளும்)

சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு: விக்ரம் (சேது)

சிறந்த நடிகை சிறப்புப் பரிசு: ரம்யா கிருஷ்ணன் (படையப்பா)

சிறந்த வில்லன் நடிகர்: ரகுவரன் (முதல்வன், இரணியன்)

சிறந்த நகைச்சுவை நடிகர்: விவேக் ( உன்னருகே நான் இருந்தால்)

சிறந்த இயக்குநர்: பி. பாலா (சேது)

சிறந்த கதையாசிரியர்: ராஜகுமாரன் (நீ வருவாய் என)

சிறந்த உரையாடலாசிரியர்: சிவராம் காந்தி (ஆனந்த பூங்காற்றே)

சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரகுமான்

சிறந்த பாடலாசிரியர்: வைரமுத்து (சங்கமம்)

சிறந்த பின்னணி பாடகர்: ஸ்ரீநிவாஸ் (படையப்பா)

சிறந்த பின்னணி பாடகி: எஸ். ஜானகி (சங்கமம்)

சிறந்த ஒளிப்பதிவாளர்: இளவரசு (மனம் விரும்புதே உன்னை)

சிறந்த ஒலிப்பதிவாளர்: ஜி.ரவி (மின்சாரக் கண்ணா)

சிறந்த எடிட்டர்: சாய் சுரேஷ் (உனக்காக எல்லாம் உன்காக)

சிறந்த ஆர்ட் டைரக்டர்: கிருஷ்ணமூர்த்தி (சங்கமம்)

Read more about: awards, chennai, cinema, tamilnadu
Please Wait while comments are loading...