»   »  'பாலுமகேந்திரா செழியனிடம் சொன்ன விஷயம்..' - விருது பெறும் 'டூ லெட்' செழியனின் நினைவலைகள்!

'பாலுமகேந்திரா செழியனிடம் சொன்ன விஷயம்..' - விருது பெறும் 'டூ லெட்' செழியனின் நினைவலைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி : 65-வது தேசிய திரைப்பட விருதுகள் சற்று முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகளுக்கான தேர்வுக் கமிட்டி தலைவராக ஷேகர் கபூர் செயல்பட்டு வருகிறார். இந்த தேர்வுக் குழுவில் நடிகை கௌதமியும் இடம்பெற்றுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரீதேவிக்கு தேசிய விருது. சிறந்த தமிழ்படம் To Let

சிறந்த தமிழ் திரைப்படமாக ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியிருக்கும் 'டூ லெட்' திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்தப் படம் இன்னும் திரையரங்கில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய விருது பெற்றிருப்பதன் மூலம் பெரும்பான்மையான ரசிகர்களின் கவனத்துக்கு வந்துள்ளது 'டூ லெட்'.

To let director Chezhiyan shares balumahendra memories

'டூ லெட்' படத்தை இயக்கியிருக்கும் செழியன், பாலுமகேந்திரா, பி.சி.ஶ்ரீராம் ஆகியோரின் மாணவராக இருந்தவர். ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றியிருக்கும் செழியன் திரைப்படங்கள் தொடர்பான புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

செழியன் விரைவில் படம் இயக்கவேண்டும் என்பது இவரது ஆசான் பாலுமகேந்திராவின் விருப்பமாம். இதுபற்றி சமீபத்தில் செழியன் தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டார். தாமதமாக இயக்குநர் அவதாரம் எடுத்தாலும், வந்த வேகத்தில் தேசிய விருது பெற்றுத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் செழியன்.

" 'நான் போறதுக்குள்ள உன் படத்தைப் பாக்கணும்ப்பா' என்று சொன்னீர்கள். நான் தான் தாமதித்துவிட்டேன்." என்று பாலுமகேந்திரா நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் செழியன். பாலுமகேந்திராவின் ஆசியோடு தற்போது விருதைப் பெறுகிறார்.

English summary
Cinematographer, Director Chezhiyan shared his memories with Late Balumahendra.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X