»   »  திரைக்கு வராத தமிழ் படத்திற்கு தேசிய விருது

திரைக்கு வராத தமிழ் படத்திற்கு தேசிய விருது

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரீதேவிக்கு தேசிய விருது. சிறந்த தமிழ்படம் To Let

டெல்லி: இன்னும் திரைக்கு வராத டூலெட் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

65வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. விருது தேர்வுக் குழுவுக்கு சேகர் கபூர் தலைமை வகித்துள்ளார். பிராந்திய மொழி படகளின் தரம் மற்றும் கலைஞர்களின் நடிப்பை பார்த்து மிரண்டு போயுள்ளதாக சேகர் கபூர் தெரிவித்துள்ளார்.

TOLET gets national award

சிறந்த தமிழ் படத்திற்கான விருது டூலெட் படத்திற்கு கிடைத்துள்ளது. இன்னும் திரைக்கு வராத இந்த படத்தை செழியன் இயக்கியுள்ளார். செழியன் பரதேசி படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார். டேக் ஆஃப் மலையாள படத்தில் நடித்த பார்வதிக்கு சிறப்பு விருது கிடைத்துள்ளது.

ஃபஹத் ஃபாசில் நடித்த தொண்டிமுதலும் திர்க்சாக்ஷியும் படத்திற்கு சிறந்த மலையாள படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது. ராணா நடித்த காஸி படத்திற்கு சிறந்த தெலுங்கு படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

ராஜ்குமார் ராவ் நடித்த நியூட்டன் படத்திற்கு சிறந்த இந்தி படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

English summary
65th national awards has been announced. TOLET movie has got national award for the best Tamil film. The movie is yet to hit the screens.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X