»   »  திரிஷா, நவ்யா, சிம்புவுக்கு கலைமாமணி

திரிஷா, நவ்யா, சிம்புவுக்கு கலைமாமணி

Subscribe to Oneindia Tamil

நடிகைகள் திரிஷா, நவ்யா நாயர், நடிகர்கள் சிம்பு, பார்த்திபன், ஜெயம் ரவி, விஷால் உள்ளிட்ட 68 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

இயல், இசை மற்றும் நாடகத் துறையைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்கள், பிரபல திரைக் கலைஞர்கள் 68 பேருக்கு முதல்வர் கருணாநிதி நேற்று நடந்த கோலாகல விழாவில் தமிழக அரசின் கலைமாமணி விருதுகளை வழங்கினார்.

தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2006ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா கலைவாணர் அரங்கில் நடந்தது. ஆளுநர் பர்னாலா தலைமை தாங்கி விருது வழங்கினார். முதல்வர் கருணாநிதி விருது பெற்றவர்களுக்கு பொற்கிழிகளை வழங்கினார்.

விழாவில் மறைந்த நடிகை ஸ்ரீவித்யா, திரைப்பட வசனகர்த்தாவும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரசொலி மாறன் உள்ளிட்டோரின் படங்களை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

விழா மலரை கருணாநிதி வெளியிட, அவரது மகள் கவிஞர் கனிமொழி பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் விருது பெற்ற கலைஞர்கள்:

இயல் துறை:

எழுத்தாளர்கள் வண்ணதாசன், பாலகுமாரன், கவிஞர் கலாப்ரியா, பேச்சாளர்கள் சுப.வீரபாண்டின், மரபின் மைந்தன் முத்தையா, சொற்பொழிவாளர்கள் ஆர்.பி. நாயுடு, செல்வகணபதி.

இசைத் துறை:

குரலிசைக் கலைஞர் சஞ்சய் சுப்ரமணியன், கீதா ராஜசேகர், சரஸ்வதி ராஜகோபாலன், ஸ்ரீவத்சவா, இறையன்பன் குத்தூஸ், இஞ்சிக்குடி சுப்ரமணியன், தவில் சுப்ரமணியன்.

நளினி பாலகிருஷ்ணன், கிரிஜா பக்கிரிசாமி, சிந்தூரி, பத்மா சம்பத்குமரன், திவ்ய கஸ்தூரி, நர்த்தகி நடராஜ், முத்தரசி.

நாடகத் துறை:

இரா.ராசு, வி.மூர்த்தி, தங்கராஜ், கவிஞர் இன்குலாப், தேவிப்ரியா, வி.ஆர்.திலகம்.

திரைப்படத் துறை:

இயக்குநர்கள் பாலா, சீமான், தயாரிப்பாளர் கோவைத்தம்பி, நடிகர்கள் பார்த்திபன், சிலம்பரசன், ஜெயம் ரவி, விஷால், ஜீவா, கஞ்சா கருப்பு, வினீத், நடிகைகள் திரிஷா, நவ்யா நாயர், ஆர்த்தி, சிஐடி சகுந்தலா, பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமார், பா.விஜய், கபிலன், இசையமைப்பாளர் வித்யாசாகர், பின்னணிப் பாடகர்கள் மது பாலகிருஷ்ணன், திப்பு, பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, எடிட்டர் விட்டல், கேமராமேன் பன்னீர் செல்வம், புகைப்படக் கலைஞர் நேஷனல் செல்லையா, ஓய்வுபெற்ற திரைப்பட நிருபர் அதிவீரபாண்டியன்.

சின்னத் திரைக் கலைஞர்கள்:

போஸ் வெங்கட், மவுனிகா, வேணு அரவிந்த், பாலாசிங், தீபா வெங்கட், சி.ஜே.பாஸ்கர், டி.ஜி.தியாகராஜன், அலெக்ஸ்.

கிராமியக் கலைஞர்கள் பெரியசாமி நாட்டார், அம்மச்சி, அக்காட்டி ஆறுமுகம், குணசேகரன், சீதாலட்சுமி, ஜெகநாதன் மற்றும் ஓவியர் டிராட்ஸ்கி மருது.

விருது பெற்ற பெரும்பாலான நடிகர், நடிகைகள் மற்றும் திரையுலகினர் மண்டியிட்டபடி முதல்வரிடம் பொற்கிழிகளைப் பெற்றுக் கொண்டனர். நடிகர் பார்த்திபன், விருது பெற்றோர் சார்பில் நன்றி உரை வழங்கினார். அவர் பேசுகையில், இந்த விருது தாய்ப்பாலை விட சுத்தமானது. இதைப் போன்ற பொருள் வேறு எதுவும் இருக்க முடியாது.

விருது பெற்றவர்கள் சார்பாக நன்றி சொல்ல எனக்கு வாய்ப்பு அளித்தது, தமிழகத்தையே எனக்கு எழுதிக் கொடுத்தது போல ஒரு சந்தோஷம் எனக்கு என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil