»   »  ஆஸ்கர் நாயகனை அசிங்கப்படுத்திய நடிகையை கொண்டாடும் நெட்டிசன்கள்

ஆஸ்கர் நாயகனை அசிங்கப்படுத்திய நடிகையை கொண்டாடும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்:

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்ற கேஸி அஃப்ளெக்கிற்கு கைதட்டாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்ட நடிகை ப்ரை லார்சனை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.

மான்செஸ்டர் பை தி சீ படத்திற்காக ஹாலிவுட் நடிகர் கேஸி அஃப்ளெக்கிற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. விருதை அறிவித்து அவருக்கு அளித்தவர் நடிகை ப்ரை லார்சன்.

ப்ரை லார்சன் கடந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதட்டல்

கைதட்டல்

விருதை அறிவித்தபோதும் சரி, அதை கொடுத்த பிறகும் சரி ப்ரை கேஸியை பாராட்டி கை தட்டவில்லை. மாறாக முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நின்றிருந்தார்.

ப்ரை

ப்ரை

பாலியல் தொல்லைகளில் சிக்கிய பெண்களுக்காக குரல் கொடுத்து வருபவர் நடிகை ப்ரை. அப்படி இருக்கும்போது பாலியல் புகார்களில் சிக்கிய கேஸிக்கு விருது கிடைத்தது பலரை போன்று அவருக்கும் பிடிக்கவில்லை. அதை தான் அவர் கைதட்டாமல் மேடையிலேயே காட்டிவிட்டார்.

பாராட்டு

பாலியல் புகார்களில் சிக்கிய கேஸிக்கு கைதட்டாமல் நின்ற ப்ரையை நெட்டிசன்கள் பாராட்டி ட்வீட் போட்டுள்ளனர். அதில் ஒருவர் ப்ரையை தனது ஹீரோ என தெரிவித்துள்ளார்.

ட்விட்டர்

கேஸி அஃப்ளெக் விருதை வென்றபோது நாம் அனைவரும் ப்ரை லார்சன் தான் என ஒருவர் ட்விட்டரில் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

English summary
Tweeples appreciate actress Brie Larson who didn't clap after giving oscar award to Casey Affleck.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil