»   »  விருதுகள்

விருதுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி, கமலோடு இணைந்து விருது வாங்குவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன் என்று கவிஞர் வைரமுத்துகூறினார்.

1999-ம் ஆண்டுக்கான சிறந்த சினிமா பாடல் ஆசிரியராக கவிஞர் வைரமுத்துவை தமிழக அரசுதேர்ந்தெடுத்துள்ளது. இது குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழக அரசின் பெருமை மிக்க விருது பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். கலைஞர்களை, இலக்கியவாதிகளைஉரிய நேரத்தில் உற்சாகப்படுத்தும் கலைஞர் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறந்த நடிகர் விருது பெறும் ரஜினி, சிவாஜி விருது பெறும் கமல் ஆகியோருடன் இணைந்து விருது பெறுவதுஇரட்டிப்பு மகிழ்ச்சி.

பாட்டு வெற்றி என்பது கூட்டு வெற்றி. சங்கமம் பட பாடல்களுக்கு கிடைத்த இந்த வெற்றியை இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா இசையமைத்த ஏ.ஆர் ரஹ்மான், தயாரிப்பாளர், பாடகர்கள், கதாசிரியர் அனைவரோடும் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த விருது எனக்கு மயக்க மாத்திரையாக இல்லாமல் ஊக்க மாத்திரையாக உதவும் என்று நம்புகின்றேன்.வாழ்த்தும் உள்ளங்களை வணங்குகின்றேன் என்று வைரமுத்து கூறியுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil