»   »  விருதுகள்

விருதுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கவியரசு வைரமுத்து, பின்னணிப் பாடகர் டி.எம். செளந்தரராஜன் (டி.எம்.எஸ்.) உள்பட 6 பேருக்கு இந்திய அரசின்உயரிய "பத்மஸ்ரீ" விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு "பத்மஸ்ரீ" விருதுக்காக 54 பேரும், "பத்மபூஷண்" விருதுக்கு 34 பேரும், "பத்மவிபூஷண்" விருதுக்குநான்கு பேரும் மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் தமிழகத்திலிருந்து ஆறு பேருக்கு "பத்மஸ்ரீ" விருதுகளும், 10 பேருக்கு "பத்மபூஷண்" விருதுகளும்வழங்கப்படுகின்றன.

"பத்மஸ்ரீ" பெறும் தமிழர்கள்:

வைரமுத்து, டி.எம்.எஸ்., நடிகை சுகுமாரி, பிரபல தொழிலதிபர் "நல்லி" குப்புசாமி செட்டியார், கிரிக்கெட் வீரர் எஸ்.வெங்கட்ராகவன் மற்றும் கல்பாக்கம் சிவராம் பாபுராவ் போஜே.

"பத்மபூஷண்" பெறும் தமிழர்கள்:

நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், கர்நாடக இசைக் கலைஞர்கள் பி. ராஜம் ஐயர் (சென்னை), கிருஷ்ணன்நாராயணன் (மதுரை), மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன், விஞ்ஞானிகள் நாராயணன் சீனிவாசன்(சென்னை), ஆர்க்காடு ராமச்சந்திரன் (பெங்களூர்), கர்நாடக இசைப் பாடகர்கள் புலியூர் சுப்ரமணியம்நாராயணசாமி, டி.வி. சங்கரநாராயணன், திருச்சூர் வி. ராமச்சந்திரன் (சென்னை) மற்றும் மூத்த வழக்கறிஞர் கே.பராசரன்.

"தமிழுக்கு மீண்டும் தேசிய மரியாதை"- வைரமுத்து:

இதற்கிடையே தனக்கு "பத்மஸ்ரீ" விருது அளிக்கப்பட்டது குறித்து வைரமுத்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழுக்கு மீண்டும் ஒரு தேசிய மரியாதை கிடைத்துள்ளது என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். இந்தவிருதுக்கு என்னைத் தகுதிப்படுத்திய தமிழ் சமுதாயத்தை வணங்குகிறேன்.

இந்திய தேசியத்தின் பெரும் விருதுகளுள் ஒன்றான இந்த "பத்மஸ்ரீ" விருதில் என்னை ஆளாக்கியஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது. அவர்கள் அனைவரையும் நான் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

சராசரி மனிதனாகிய எனக்கும் இந்தப் பெருமையை அளித்த இந்திய ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்,பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி ஆகியோருக்கும், வாழ்த்தி வாழ்த்தி என்னை வளர்த்தெடுத்தமுத்தமிழறிஞரான கலைஞர் கருணாநிதிக்கும், இந்த விருதுக்கு என்னை முன் மொழிந்த அனைத்துஉள்ளங்களுக்கும் கனத்த மனதோடு நன்றி சொல்கிறேன்.

மேலம் இலக்கிய உலகத்திலும், கலை உலகத்திலும் எனக்கு வழிகாட்டிய பெருமக்களுக்கும், எந்த நிலையிலும் என்மீது அன்பு செலுத்தும் பாசத்திற்குரிய பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.

இந்த விருது நான் கடந்தோடி வந்த தூரங்களுக்கான இளைப்பாறுதல் அல்ல. இனி நான் கடக்கப் போகும்பிரயாணத்திற்கான பிராண வாயு என்று கருதுகிறேன்.

கலைத் துறையிலும், இலக்கியத் துறையிலும் ஈடுபடும் புதிய தலைமுறைக்கு இந்த விருது ஒரு நம்பிக்கை தரும்என்று நம்புகிறேன்.

விருது பெற்றதால் சின்னதொரு மகிழ்ச்சி மனதுக்குள் பம்பரம் சுற்றுகிறது என்பதை நான் மறுக்கவில்லை. அதேநேரத்தில், இது போதாது என்றும் புதியன பல சாதிக்க வேண்டும் என்ற பொறுப்பும் எனக்கு வந்துள்ளதுஎன்பதையும் நான் மறுக்கக் கூடாது என்று அவ்வறிக்கையில் வைரமுத்து கூறியுள்ளார்.

சிவாஜி பெயரில் தங்கப் பதக்கம்!

இதற்கிடையே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயர் பொறிக்கப்பட்ட தங்கப் பதக்கத்தை, சிவாஜி-பிரபுஅறக்கட்டளை தயாரித்துள்ளது. இந்தப் பதக்கங்களை விற்பனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவாஜியின் மூத்த புதல்வரான ராம்குமார் கூறுகையில்,

இன்னொரு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்தத் தங்கப் பதக்கங்களை சிவாஜி-பிரபு அறக்கட்டளை நிறுவனம்தயாரித்துள்ளது.

ஒரு பதக்கத்தின் விலை ரூ.44,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 10,000 பதக்கங்கள்தயாரிக்கப்பட்டுள்ளன.

நடிகர் கமல்ஹாசன் இந்த பதக்க விற்பனையைத் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் கிடைக்கும் நிதியை வைத்துபல்வேறு நலக் காரியங்களை செய்ய அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இன்டர்நெட் மூலமாகவும்பதக்கங்களைப் பெறலாம் என்றார் ராம்குமார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil