twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் போட்டிக்கு முன்னேறிய பட்டியலில் இடம்பெற்ற கூழாங்கல்.. சந்தோஷத்தில் விக்னேஷ் சிவன்!

    |

    சென்னை: ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள தமிழ் படமான கூழாங்கல் திரைப்படம் அடுத்த கட்ட போட்டிக்கு முன்னேறி உள்ளது.

    இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவான கூழாங்கல் திரைப்படம் ஏகப்பட்ட விருது விழா நிகழ்ச்சிகளில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை அள்ளி உள்ளது.

    சிங்கப்பூரில் கடந்த டிசம்பர் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படத்திற்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    சிம்பு முதல் விஜயகாந்த் வரை தங்கச்சி... கோடம்பாக்கத்தின் தங்கச்சி அகிலா குஷி! சிம்பு முதல் விஜயகாந்த் வரை தங்கச்சி... கோடம்பாக்கத்தின் தங்கச்சி அகிலா குஷி!

    ஆஸ்கருக்கு தேர்வு

    ஆஸ்கருக்கு தேர்வு

    கடந்த ஆண்டு மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த படம் நாமினேஷன் பட்டியலில் இடம்பெறாமல் பின் வாங்கியது. இந்நிலையில், இந்த ஆண்டு இந்தியா சார்பாக கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகி உள்ளது.

    நயன்தாரா தயாரிப்பு

    நயன்தாரா தயாரிப்பு

    இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரித்துள்ள இந்த படம் டைகர் விருது உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை அள்ளி உள்ளது. ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழ் ரசிகர்களின் பார்வைக்காக எப்போது இந்த படம் திரைக்கு வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

    என்ன கதை

    என்ன கதை

    மதுரையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் குடிகாரக் கணவர் மனைவியை அடித்து விரட்ட மறுநாள் மகனும் அப்பாவும் சேர்ந்து கொண்டு அந்த பெண்ணை தேடி அலைவது தான் கதை. அதை எந்த அளவுக்கு சினிமாவாக சொல்லாமல் யதார்த்தமாக படம் ஆக்கி இருக்கிறார் வினோத் ராஜ் என்பதற்கு இத்தனை விருது விழாக்களில் அந்த படம் அள்ளிய பாராட்டுக்களே பதில் சொல்லும்.

    ஆஸ்கர் ரேஸில் முன்னேற்றம்

    ஆஸ்கர் ரேஸில் முன்னேற்றம்

    இந்நிலையில், ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட கூழாங்கல் திரைப்படம் அயல் மொழி திரைப்படத்துக்கான போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும் படங்களின் பட்டியலில் தேர்வாகி உள்ளது. (Eligible for consideration in the international feature film category) என்கிற ட்வீட்டை இயக்குநர் விக்னேஷ் சிவன் போட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

    Recommended Video

    Nayanthara Vignesh shivan first Success | Rowdy Pictures, Kuzhangal
    நாமினேஷன் பட்டியலுக்கு வருமா

    நாமினேஷன் பட்டியலுக்கு வருமா

    கடந்த ஆண்டு ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட ஜல்லிக்கட்டு மற்றும் ஒடிடி படம் என்கிற முறையில் தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்ட சூர்யாவின் சூரரைப் போற்று உள்ளிட்ட படங்கள் ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த முறையாவது ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் இந்தியா சார்பாக அனுப்பப்பட்ட கூழாங்கல் திரைப்படம் இடம்பெற்று விருதை தட்டிச் செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    Rowdy Pictures producer and director Vignesh Shivan surprised to see the Pebbles movie in Oscar’s eligible list and shares the details in his twitter handle.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X