»   »  'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதிக்கு பெரியார் விருது #VijaySethupathi

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதிக்கு பெரியார் விருது #VijaySethupathi

Posted By:
Subscribe to Oneindia Tamil
வரும் 15ம் தேதி நடக்கும் விழாவில் விஜய் சேதுபதி, கோபி நயினாருக்கு விருது வழங்கப்பட உள்ளது

சென்னை: மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு பெரியார் விருது வழங்கப்பட உள்ளது.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் பெரியார் விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பெரியார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோபி நயினார்

கோபி நயினார்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அறம் பட இயக்குனர் கோபி நயினார் உள்பட 11 பேருக்கு பெரியார் விருதுகள் வழங்கப்பட உள்ளது. ஜனவரி 15, 16 ஆகிய தேதிகளில் சென்னை பெரியார் திடலில் நடக்கும் திராவிடர் திருநாள் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

கி. வீரமணி

கி. வீரமணி

வரும் 15ம் தேதி நடக்கும் விழாவில் விஜய் சேதுபதி, கோபி நயினாருக்கு விருது வழங்கப்பட உள்ளது. திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

விஜய் சேதுபதிக்கு பெரியார் விருது கிடைத்துள்ளதை நினைத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உழைப்பால் உயர்ந்தவர் எங்கள் அண்ணன் என்று கூறி பெருமைப்படுகிறார்கள்.

போலீஸ்

போலீஸ்

மணிரத்னம் இயக்கதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். அந்த படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். நிச்சயம் காலத்தால் அழியாத போலீஸ் அதிகாரியாக நிலைத்து நிற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Vijay Sethupathi and Aramm director Gopi Nainar will receive Periyar award from Dravidar Kazhagam chief K. Veeramani at a function to be held in Chennai on january 15.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X