»   »  விஜய்- ஆசினுக்கு சிறந்த நடிகர் விருது

விஜய்- ஆசினுக்கு சிறந்த நடிகர் விருது

Subscribe to Oneindia Tamil

சென்னை கார்பரேட் கிளப் சார்பில் சிறந்த நடிகராக விஜய்யும் சிறந்த நடிகையாக ஆசினும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2005ம் ஆண்டின் சிறந்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் வெவ்வேறு துறைகளில் சிறந்தசாதனையாளார்களை தேர்வு செய்து சென்னை கார்பரேட் கிளப், விருதுகள் வழங்குகிறது.


இது குறித்து கார்பரேட் கிளப் செயலாளர் ஜெயச்சந்திரன் கூறியிருப்பதாவது:

எம்ஜிஆர்-சிவாஜி அகடமி விருதுகள் என்ற பெயரில் சென்னை ராயப்பேட்டை வெஸ்லி ஸ்கூல் மைதானத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை விருதுகள் வழங்கப்படுகின்றன. விழாவில் நடிகர் சரத்குமாருக்கு சிவாஜிகணேசன் விருதும், நடிகர்கார்த்திக்குக்கு எம்ஜிஆர் விருதும், நடிகர் சத்யாராஜூக்கு என்றும் கதாநாயகன் என்ற விருதும் வழங்கப்படுகிறது.


பட அதிபர் ஏவிஎம் சரவணன், இயக்குநர் ஸ்ரீதர், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் வாலி, நடிகர் நாகேஷ்,நடிகை மனோரமா, மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன், பத்திரிகையாளர் ராமமூர்த்தி ஆகியோரும்சாதனையாளர்களுக்கான விருதுகளை பெறுகிறார்கள்.

இந்த விழாவில் சிறந்த நடிகராக விஜய் (திருப்பாச்சி, சச்சின், சிவகாசி), சிறந்த நடிகையாக ஆசின் (கஜினி, சிவகாசி, மஜா),ஆகியோருக்கும், சிறந்த இயக்குநராக பி.வாசு (சந்திரமுகி), சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது கனாகண்டேன் படத்திற்காகஸ்ரீகாந்திற்கும், தவமாய் தவமிருந்து படத்தில் நடித்த ராஜ்கிரண், சரண்யா ஆகியோருக்கும், மற்றும் சிறப்பு விருது சேரனுக்கும்வழங்கப்படும்.


எஸ்.ஜே.சூர்யா (அன்பே ஆருயிரே), ஸ்னேகா (ஏபிசிடி), இயக்குனர் ஹரி (ஆறு), பரத் (காதல்), சந்தியா (காதல்), புதுமுகஇயக்குனர் விஷ்ணுவர்த்தன் (அறிந்தும் அறியாமலும்), இயக்குனர் அமீர் (ராம்), நடிகர் ஜீவா (ராம்), நடிகை அபர்ணா (ஏபிசிடி)ஆகியோருக்கும், சிறந்த படங்களாக சந்திரமுகி, திருப்பாச்சி, சிவகாசி ஆகியவற்றிற்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

சிறந்த தயாரிப்பாளர்கள் விருதை எஸ்.தாணு, சேலம் ஏ.சந்திரசேகர், கிறிஸ்டி, இயக்குனர்கள் ஆர்.வி. உதயகுமார், பாலா, சரண்,பேரரசு, பாலாஜி சக்திவேல், பிரியா ஆகியோரும் பெறுகின்றனர் என்றார் ஜெயச்சந்திரன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil