»   »  விக்ரமுக்கு தேசிய விருது: கலாம் வழங்கினார்

விக்ரமுக்கு தேசிய விருது: கலாம் வழங்கினார்

Subscribe to Oneindia Tamil

கடந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை விக்ரமுக்கு ஜனாதிபதி அப்துல் கலாம் வழங்கினார். சிறந்த நடிகைக்கான விருதைமீரா ஜாஸ்மீன் பெற்றார்.

தமிழில் சிறந்த படத்திற்கான விருதை இயற்கை பட இயக்குனர் ஜனா பெற்றுக் கொண்டார்.

சிறந்த திரைப்படங்கள், கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது.குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விருதுகளை வழங்கி கலைஞர்களைப் பாராட்டினார்.

திரைத் துறைக்கு சிறந்த சேவை புரிந்தமைக்காக பிரபல திரைப்பட இயக்குனர் மிருனாள் சென்னுக்கு தாதா சாஹேப் பால்கே விருதுவழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருதை விக்ரம், சிறந்த நடிகைக்கான விருதை மீரா ஜாஸ்மினுக்கும், சிறந்த குழந்தைநட்சத்திரத்திற்கான விருதை காளிதாஸ் (நடிகர் ஜெயராமின் மகன்) பெற்றனர்.


தமிழில் சிறந்த படத்திற்கான விருதை இயற்கை பட இயக்குனர் ஜனா பெற்றுக் கொண்டார்.

விருதுகுறித்து விக்ரம் கூறுகையில், ஒரு தமிழனின் கையால் ஒரு தமிழன் விருது பெற்றது மிகப் பெருமையாக இருக்கிறது. இதைஆஸ்காருக்கு இணையான விருதாக நினைத்து மதிக்கிறேன். இந்த விருதால் நான் சரியான பாதையில் செல்வதாக ஒரு நிறைவுஏற்பட்டிருக்கிறது.

இந்த விருது முடிவல்ல. ஒரு நல்ல ஆரம்பமாகவே கருதுகிறேன். இந்த விருதுக்கு முக்கிய காரணமாக இருந்த இயக்குனர் பாலாவுக்கேபெருமை எல்லாம் போய்ச் சேரும்.

ஒரு நல்ல வில்லன் பாத்திரத்தில் நடிக்க ஆசையாக உள்ளேன் என்றார்.

முன்னதாக தேசிய விருது பெற்று இன்று காலை விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய விக்ரமுக்கு விமான நிலையத்தில்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது ரசிகர்கள் பெருமளவில் குவிந்து அவரை வரவேற்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil