»   »  விக்ரம், ஸ்னேகாவுக்கு சினிமா ரசிகர் சங்கம் விருது

விக்ரம், ஸ்னேகாவுக்கு சினிமா ரசிகர் சங்கம் விருது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:


2003ம் ஆண்டின் சிறந்த நடிகராக விக்ரமையும், சிறந்த நடிகையாக ஸ்னேகாவையும் சினிமா ரசிகர் சங்கம் தேர்வுசெய்துள்ளது.

சினிமா ரசிகர் சங்கம் கடந்த 52 வருடங்களாக சிறந்த நடிகர்,- நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களைத்தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.

2003ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலை பிலிம்சேம்பர் தியேட்டரில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிஜெகதீசன் வெளியிட்டார்.

தமிழில் சிறந்த நடிகராக விக்ரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தூள் படத்தில் நடித்தற்காக அவர் இந்த விருதைப்பெறுகிறார். சிறந்த நடிகையாக ஸ்னேகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் பார்த்திபன் கனவு படத்துக்காக இந்தவிருதைப் பெறுகிறார்.


சிறந்த தயாரிப்பாளராக ஏ.எம்.ரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் பல தொழில் நுட்பக் கலைஞர்கள்சினிமா ரசிகர் சங்க விருதுகளுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கன்னடத்தில் தாசா, தாயில்லாத தபலி ஆகிய படங்களை தயாரித்த ரமேஷ் யாதவ் சிறந்த தயாரிப்பாளராக தேர்வுசெய்யப்பட்டு உள்ளார். தாசா படத்தை இயக்கிய பி.என்.சத்யா சிறந்த இயக்குனராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தாயில்லா தபலி படத்தில் நடித்த குட்டி ராதிகா சிறந்த நடிகைக்கான விருதைப் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விருது வழங்கும் நிகழ்ச்சி ஆகஸ்டு மாதம் 29ம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil