»   »  குவைத்தில் விக்ரமுக்கு பாராட்டு விழா

குவைத்தில் விக்ரமுக்கு பாராட்டு விழா

Subscribe to Oneindia Tamil

பிதாமகன் படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர் விக்ரமுக்கு வருகிற 10ம் தேதி குவைத்தில் பாராட்டு விழா நடக்கிறது.

பிதாமகன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2003ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற நடிகர் விக்ரம் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். வரும் 2ம் தேதி டெல்லியில் நடக்கும் வழங்கும் விழாவில் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவருக்கு இந்தவிருதை வழங்குகிறார்.

இதைப் பாராட்டி வரும் 10ம் தேதி குவைத்தில் விக்ரமுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவை பிரண்ட்லைனர்ஸ் என்றஅமைப்பு நடத்துகிறது. இது குவைத் நாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் இணைந்து உருவாக்கிய சேவை அமைப்பாகும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ் எழுத்தாளர் என்.சி. மோகன்தாஸ் செய்து வருகிறார்.

விக்ரமை தந்துவிட்டேன் படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் விழாவுக்கு தலைமை தாங்குகிறார்.பிதாமகன் இயக்குனர் பாலாவும் இந் நிகழ்ச்சியில் பங்கேற்கினார்.

குவைத்திற்கான இந்திய தூதரக அதிகாரி, விக்ரம் குறித்த சிறப்பு மலரை வெளியிடுகிறார். நிகழ்ச்சியில் விக்ரம் நடித்த படங்களின்காட்சிகளும் திரையிடப்படுகின்றன. பின்னர் விக்ரம் எத்தனை விக்ரமடா என்ற தலைப்பில் சங்கமம் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள்நடைபெறுகின்றன.

இந்த விழா மூலம் கிடைக்கும் நிதியில் ஒரு பகுதி, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வழங்கப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil