»   »  ஆஸ்கர் ரேஸில் வெற்றிமாறனின் விசாரணை: ரஜினி அன்னைக்கே சொன்னாரு..

ஆஸ்கர் ரேஸில் வெற்றிமாறனின் விசாரணை: ரஜினி அன்னைக்கே சொன்னாரு..

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விசாரணை படம் ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறித்து ரஜினி அன்றே கூறினார் என்கிறார்கள் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்.

தனுஷ், வெற்றிமாறன் சேர்ந்து தயாரித்த விசாரணை படத்திற்கு 3 தேசிய விருதுகள் கிடைத்தது. வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் ஆஹோ, ஓஹோ என்று பாராட்டினர்.

Visaranai shortlisted for Oscar: Rajini knows it

இந்நிலையில் விசாரணை படம் ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. உலக நாயகன் செவாலியே கமல் ஹாஸன் நடித்த ஹேராம் படத்திற்கு பிறகு ஆஸ்கருக்கு செல்லும் தமிழ் படம் விசாரணை.

இந்நிலையில் விசாரணை ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறித்து ரஜினி அப்பொழுதே கூறினார் என்கிறார்கள் அவர் ரசிகர்கள். என்னது, ரஜினி சொன்னாரா? இது எப்போப்பா நடந்தது என்று கேட்டால் இந்த ட்வீட்டை பதிலாக அளிக்கிறார்கள்.

நீங்களே இந்த ட்வீட்டை படித்துப் பாருங்கள்,

விசாரணை மாதிரி ஒரு படத்தை தமிழில் நான் இது வரை பார்த்ததில்லை. உலக படவரிசையில் ஒரு தமிழ் படம். வாழ்த்துக்கள் வெற்றிமாறன் - தனுஷ்.

அது சரி. நீங்க எல்லாம் நல்லா வருவீங்க பாஸ்!

English summary
Rajinikanth fans are proudly saying that their superstar knows that Vetrimaran's Visarani will get international recognition like Oscar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil