»   »  விருது விழாவுக்கு ஏற்பாடு செய்யும் மாநில அரசு... விஷாலுக்கு நெருக்கடி?

விருது விழாவுக்கு ஏற்பாடு செய்யும் மாநில அரசு... விஷாலுக்கு நெருக்கடி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட திரைப்பட விருதுகளை ஜனவரி மாதத்தில் விழா வைத்து வழங்க ஆட்சியாளர்கள் திட்டமிடுகிறார்களாம். இது விஷாலுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் என்கிறார்கள்.

கலைஞர் ஆட்சியில் இருந்தவரை அடிக்கடி விழா எடுத்து கலைஞரை மகிழ்விப்பார்கள் திரைத்துறையினர். ஜெயலலிதாவிடம் இந்த பாச்சா பலிக்கவில்லை. அவர் இருந்தவரை ஜால்ரா கும்பலை நெருங்கவே விடவில்லை. நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் கேட்டுப் பார்த்தும் முடியாது என்று மறுத்துவிட்டார். ஆனால் ஜெயலலிதா மறைந்த பிறகு ஏராளமான வருங்கால முதல்வர்கள் சினிமாவில் முளைத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என்று இரண்டு முக்கிய சங்கங்களிலும் தலைமை பொறுப்பில் இருக்கும் விஷால் ஒருபடி மேலே போய் ஆர்கே நகர் இடைதேர்தலில் போட்டியிட்டதோடு ஆளுங்கட்சியை விமர்சனமும் செய்தார்.

Vishal under new pressure

இதற்கெல்லாம் செக் வைக்கும் விதமாக தமிழ அரசு சினிமாத்துறையினருக்கு அறிவித்திருக்கும் விருதுகளை ஒரு விழா வைத்து வழங்கப்பட திட்டமிட்டுள்ளதாம். இந்த விழாவுக்கு ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டி வரும். முதல்வரையும் அரசையும் பாராட்டியே ஆக வேண்டும்.

விஷால்தான் தலைமையேற்று நடத்த வேண்டி இருக்கும். இது அவருக்கு அரசு தரும் புது நெருக்கடி என்றே சொல்கிறார்கள்.

English summary
The Govt of Tamil Nadu has decided to conduct an award function for Tamil cinema artists and asked Vishal to make arrangements.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X