Just In
- 5 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 5 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 7 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 8 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
BlacKkKlansman: ஆஸ்கர் வென்ற படத்தின் தலைப்பில் அதென்ன 3 K?
லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது வென்ற BlacKkKlansman பட தலைப்பில் இருக்கும் மூன்று k பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
91வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடந்து முடிந்தது. இந்த விழாவில் பொஹிமியன் ராப்சொடி படம் அதிகபட்சமாக 4 விருதுகளை வென்றது.

சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருது BlacKkKlansman படத்திற்கு கிடைத்தது. அந்த விருதை நடிகர் சாமூவல் எல். ஜான்சன் அறிவித்ததும் இயக்குநர் ஸ்பைக் லீ ஓடி வந்து அவரை கட்டிப்பிடித்து தொங்கினார்.
கருப்பினத்தவர்களை வெறுக்கும் வெள்ளையர்கள் குழு பற்றிய படத்திற்கான விருதை கருப்பினத்தை சேர்ந்த ஒருவர் அறிவிக்க அதே இனத்தை சேர்ந்த லீ பெற்றுக் கொண்டதை பார்த்து அரங்கமே அதிர்ந்தது.
அமெரிக்காவை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான ரான் ஸ்டால்வொர்த் எழுதிய சுயசரிதையான Black Klansman-ஐ தழுவி படத்தை எடுத்தார் லீ. கொலரடோ ஸ்பிரிங்ஸ் காவல் துறையின் முதல் கருப்பின போலீஸ் அதிகாரி ரான் என்பது குறிப்பிடத்தக்கது.
கருப்பினத்தவர்களை வெறுக்கும் Ku Klux Clan(கூ க்ளக்ஸ் கிளான்) குழுவில் சேர்ந்து அவர்களின் செயல்களை அம்பலப்படுத்தியவர் ரான். கருப்பினத்தவர்களை வெறுக்கும் குழுவில் ரான் எப்படி சேர்ந்தார் என்று நினைக்கலாம். Ku Klux Clan ஆட்களை போனில் தொடர்பு கொண்டு பேசியது ரான் ஆனால் அவர்களை சந்திக்க தனக்கு பதிலாக வெள்ளையர் ஒருவரை அனுப்பி வைத்தார்.
அந்த குழுவை சேர்ந்தவர்கள் கருப்பினத்தவர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவதற்கு பெயர் போனவர்கள். Ku Klux Clan தற்போதும் செயல்பாட்டில் உள்ளது. கடந்த ஆண்டு அந்த குழுவில் 8 முதல் 12 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருந்தது தெரிய வந்தது. அந்த அமைப்பை குறிக்கும் வகையில் தான் படத்தின் தலைப்பில் மூன்று K உள்ளது.