Don't Miss!
- News
கர்நாடகாவில் பத்ரா மேலணை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு.. தேர்தல் தேர்தல் என எதிர்க்கட்சிகள் கூச்சல்
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: மோடி அரசின் 7 முன்னுரிமைகள் - நிர்மலா சீதாராமன்
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வில் ஸ்மித் நிஜமாகவே குத்தினாரா...ஆஸ்கர் மேடையில் நடந்த பரபரப்பு சம்பவம்
லாஸ் ஏஞ்சல்ஸ் : ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் கிரிஸ் ராக்கை, வில் ஸ்மித் மேடையில் வைத்து குத்திய சம்பவம் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருக்கிறது. ஸ்மித் குத்தியது உண்மை தானா அல்லது எல்லாமே வெறும் ஸ்கிரிப்ட் படி நடத்தப்பட்டதா என்பது தான் அனைவரும் கேட்கும் ஒரே கேள்வியாக உள்ளது.
94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய நேரப்படி மார்ச் 28 ம் தேதி காலை 5 மணிக்கு துவங்கி நடைபெற்றது. இதில் ஏராளமான திரை பிரபலங்கள் ரெட் கார்பெட் நிகழ்வில் கலந்து கொண்டு அசத்தினர். இந்த நிகழ்ச்சியை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நேரடியாக ஒளிபரப்பு செய்தது.
Oscars
2022:
6
விருதை
அள்ளிய
டூன்..
வில்
ஸ்மித்துக்கு
கிடைத்த
ஆஸ்கர்
விருது..
முழு
லிஸ்ட்
இதோ!

விழாவில் நடந்தது என்ன
இதில் விருது வழங்குபவர்களில் கிரிஸ் ராக்கும் ஒருவராக இருந்தார். இவர் விருது வழங்கிக் கொண்டிருக்கையில் மேடைக்கு வந்த ஸ்மித், கிரிசை முகத்தில் வேகமாக குத்தினார். பிறகு மேடையிலேயே அவரை எச்சரித்து விட்டும், அனைவரின் முன்னிலையிலும் கண்டபடி திட்டி விட்டு போனார். இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களும், நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களின் மோதலால் ஹாட்ஸ்டார் உடனடியாக நேரடி ஒளிபரப்பை சிறிது நேரம் நிறுத்தியது.

எதற்காக குத்தினார் ஸ்மித்
விருது வழங்கும் போது பேசிய கிரிஸ் ராக், விளையாட்டாக ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித் பற்றி பேசினார். அவர் பார்ப்பதற்கு GI Jane 2 போல் இருக்கிறார் என்றார். இதனால் கோபமடைந்த ஸ்மித், உடனடியாக மேடைக்கு வந்து, கிரிஸ் முகத்தில் ஓங்கி குத்தினார். பிறகு, என் மனைவி பற்றி பேசுவதை நிறுத்துங்கள் என எச்சரித்து விட்டு, தன் இறுக்கைக்கு வந்தார். ஆனால் கிரிஸ், ஸ்மித் தனது மனதை புண்படுத்தி விட்டதாக தெரிவித்தார்.

நோயால் பாதிக்கப்பட்ட ஜடா
1997 ம் ஆண்டு ஸ்மித்தும், ஜடா பிங்கிட்டும் திருமணம் செய்து கொண்டனர். 2018 ம் ஆண்டு ஜடா பிங்கெட் ஸ்மித், தான் Alopecia என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டிறியப்பட்டுள்ளதாக அறிவித்தார். தான் தற்போது எவ்வாறு நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறேன் என்பதையும் ஓப்பனாக கூறி இருந்தார். Alopecia நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலை முடி அதிக அளவில் உதிர்ந்து, மொட்டையாகும் நிலை ஏற்படும்.

குத்தியதற்கு இது தான் காரணமா
2021 ம் மொட்டை தலையுடன் இருக்கும் வீடியோ ஒன்றையும் ஸ்மித்தின் மனைவி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதோடு, எனக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறதா அல்லது வேறு ஏதாவதுமா என யாரும் நினைத்து விட வேண்டாம். நானும், இந்த alopecia நோயும் நண்பர்களான காலம் இது என குறிப்பிட்டிருந்தார். இது தெரிந்தும் அவரது உருவத்தை கேலி செய்யும் விதமாக கிரிஸ் பேசியதே ஸ்மித்திற்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.