முதல் முறையாக ஆஸ்கர் விருது வென்ற வில் ஸ்மித்.. அந்த அடி கொடுத்தும் கொடுக்கலைன்னா எப்படி?

லாஸ் ஏஞ்சல்ஸ்: மென் இன் பிளாக், பேட் பாய்ஸ் என ஆக்‌ஷன் படங்களில் அசத்தி வந்த பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் முதன் முறையாக ஆஸ்கர் விருதை தட்டித் தூக்கி உள்ளார்.

கிங் ரிச்சர்ட் எனும் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார் நடிகர் வில் ஸ்மித்.

ஆஸ்கர் விழாவின் போது நடிகர் கிறிஸ் ராக் என்பவரை ஜோக்குக்காக அடித்தது மிகப்பெரிய அளவில் டிரெண்டான நிலையில், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்ததும் மனுஷன் கண் கலங்கி அழுதுவிட்டார்.

வில் ஸ்மித்

வில் ஸ்மித்

1992ம் ஆண்டு வெளியான Where the Days Take You படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வில் ஸ்மித். 1995ம் ஆண்டு வெளியான பேட் பாய்ஸ் திரைப்படம் சர்வதேச அளவில் இவருக்கு ரசிகர்களை பெற்றுத் தந்தது. அதனை தொடர்ந்து வெளியான இண்டிபென்டன்ஸ் டே, மென் இன் பிளாக் படங்கள் மூலம் உலகளவில் ஆக்‌ஷன் சூப்பர்ஸ்டாராக மாறினார் வில் ஸ்மித்.

ஆஸ்கர் வென்றார் வில் ஸ்மித்

ஆஸ்கர் வென்றார் வில் ஸ்மித்

செரினா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸின் தந்தை ரிச்சர்ட் வில்லியம்ஸின் நிஜ வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட கிங் ரிச்சர்ட் படத்தில் ரிச்சர்ட் வில்லியம்ஸாக நடித்த வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது 94வது ஆஸ்கர் விருது விழாவில் வழங்கப்பட்டுள்ளது.

கண்ணீர் மல்க நன்றி

கண்ணீர் மல்க நன்றி

2002ம் ஆண்டு அலி திரைப்படத்திற்கும் 2007ம் ஆண்டு பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ் படத்திற்காகவும் நாமினேட் செய்யப்பட்ட வில் ஸ்மித்துக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2022ம் ஆண்டு கிங் ரிச்சர்ட் படத்தின் மூலம் அவரது ஆஸ்கர் கனவு நிறைவேறியுள்ளது.ஆஸ்கர் விருதை பெற்ற வில் ஸ்மித் மேடையில் கண் கலங்கி அழுதபடியே பேசிய காட்சிகள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

நடிகருக்கு பளார்

நடிகருக்கு பளார்

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்படுவதற்கு முன்னதாக வில் ஸ்மித்தின் மனைவியின் ஹேர் ஸ்டைலை கிண்டல் செய்த தொகுப்பாளர் கிறிஸ் ராக் எனும் நடிகரை விளையாட்டுத் தனமாக வில் ஸ்மித் அடித்தது பெரும் பரபரப்பை கிளப்பி சர்வதேச அளவில் டிரெண்டானது. ஆஸ்கர் விருது கிடைத்ததும் அப்படி நடந்து கொண்டதற்கு மன்னிப்பையும் கேட்டு நல்ல பிள்ளையாக மாறிவிட்டார் வில் ஸ்மித்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X