twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Oscars 2019: அது ஏன் இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவுக்கு தொகுப்பாளர் இல்லை?

    By Siva
    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழா தொகுப்பாளர் இன்றி நடக்கிறது.

    91வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று இரவு நடக்கிறது. இந்த ஆண்டு விழா தொகுப்பாளர் இன்றி நடக்க உள்ளது.

    அது ஏன் தொகுப்பாளர் இல்லை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

    நடிகர்

    நடிகர்

    ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்க அமெரிக்க நடிகர் கெவின் ஹார்ட் கடந்த டிசம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்கப் போகிறேன், என் கனவு நிறைவேறிவிட்டது என்று கெவின் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார்.

    ஓரினச்சேர்க்கையாளர்கள்

    ஓரினச்சேர்க்கையாளர்கள்

    ஆஸ்கர் விழா தொகுப்பாளராக கெவின் அறிவிக்கப்பட்டதை பார்த்த நெட்டிசன்கள் அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக போட்ட ட்வீட்டுகளை தேடிக் கண்டுபிடித்து விளாசினார்கள். கெவினை விளாசியதோடு ஆஸ்கர் விழா ஏற்பாட்டாளர்களையும் கிண்டல் செய்தனர்.

    தொகுப்பாளர்

    தொகுப்பாளர்

    சமூக வலைதளங்களில் தன்னை மக்கள் விளாசியதை பார்த்த கெவின் ஆஸ்கர் விருது விழா தொகுப்பாளர் பொறுப்பில் இருந்து விலகினார். அதன் பிறகு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களை வைத்தே விழாவை நடத்தப் போகிறார்கள்.

    மோசம்

    மோசம்

    முன்னதாக 1989ம் ஆண்டு ஆஸ்கர் விருது விழா தொகுப்பாளர் இன்றி நடத்தப்பட்டது. ஒரு பெண் ஸ்னோ ஒயிட் போன்று உடை அணிந்து வந்து நடனம் ஆடியதை பார்த்து பலரும் விளாசினார்கள். தொகுப்பாளர் இல்லாத அந்த விழா பிளாப்பானது. இந்த ஆண்டு விழா எப்படி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    After 30 years, Oscars will be held without a host tonight.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X