twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஐபிஎல் இறுதிப்போட்டியில் லால் சிங் சத்தா டிரைலர்.. அமீர்கானின் மாஸ்டர் பிளாஸ்டர் பிளான் என்ன?

    |

    மும்பை: பாலிவுட் திரையுலகையே கடந்த சில ஆண்டுகளாக மூழ்கும் கப்பலாக இருக்கும் நிலையில், நான் வெயிட்டா வரேன் என லால் சிங் சத்தா படத்துடன் கிரவுண்டில் இறங்கி சிக்ஸர் அடிக்க காத்திருக்கிறார் நடிகர் அமீர்கான்.

    இந்திய திரையுலகின் நம்பர் ஒன் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இன்னமும் கெத்துக் காட்டி இருக்கிறார் அமீர்கான்.

    தங்கல் திரைப்படத்தின் மூலம் 2000 கோடி ரூபாயை வசூலித்து அவர் செய்த சாதனையை பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎஃப் 2 உள்ளிட்ட படங்களால் கூட இன்னமும் முறியடிக்க முடியவில்லை.

    ஒல்லி நடிகரை பார்த்து ஓட்டம் எடுக்கும் தயாரிப்பாளர்கள்.. கேட்டா ஏகப்பட்ட காரணங்கள் சொல்றாங்க!ஒல்லி நடிகரை பார்த்து ஓட்டம் எடுக்கும் தயாரிப்பாளர்கள்.. கேட்டா ஏகப்பட்ட காரணங்கள் சொல்றாங்க!

    பாலிவுட்டின் பிரம்மாஸ்த்ரம்

    பாலிவுட்டின் பிரம்மாஸ்த்ரம்

    கடந்த சில ஆண்டுகளாகவே பாலிவுட் திரையுலகை பாலிவுட் ரசிகர்களே ட்ரோல் செய்து வரும் நிலை தான் நீடித்து வருகிறது. ஷாருக்கான் கடந்த 4 ஆண்டுகளாக இன்னமும் ஒரு படத்தை கூட கொடுக்கவில்லை. அதற்கு முன்னதாக வெளியான ஜீரோ படமும் டைட்டிலை போலவே ரிசல்ட்டை பெற்றது. தங்கல் படத்திற்கு பிறகு தக்ஸ் ஆஃப் இந்தோஸ்த்தான் படத்தை ரிலீஸ் செய்த அமீர்கானுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

    ஆஸ்கர் படம்

    ஆஸ்கர் படம்

    பாலிவுட்டில் முன்னணி நடிகர்களான பலரும் தென்னிந்திய மொழி படங்களை ரீமேக் செய்து நடித்து வருகின்றனர். அங்கே ரீமேக் கலாச்சாரம் பெருகிய நிலையில், ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹாலிவுட் படமான Forest Gump படத்தை அதிகாரப்பூர்வமாக ரீமேக் செய்ய முடிவெடுத்து அதற்காக ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்து அந்த படத்தை உருவாக்கி உள்ளார் அமீர்கான்.

    பந்தயம் அடிக்கும்

    பந்தயம் அடிக்கும்

    லகான், கஜினி, தூம் 3, 3 இடியட்ஸ், பிகே, தங்கல் என பல ஹிட் படங்களை கொடுத்த நடிகர் அமீர்கான் நடிப்பில் உருவாகி உள்ள லால் சிங் சத்தா விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. நிச்சயம் பாக்ஸ் ஆபிஸில் இந்தியளவில் மிகப்பெரிய சாதனையை இந்த படம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரீனா கபூர், நாக சைதன்யா உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

    ஐபிஎல் இறுதிப்போட்டியில்

    ஐபிஎல் இறுதிப்போட்டியில்

    இந்நிலையில், அந்த படத்தின் அட்டகாசமான டிரைலரை வரும் மே 29ம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதிப்போட்டியின் இரண்டாவது ஸ்ட்ரேட்டஜிக் டைம் அவுட் நேரமான 2.30 நிமிடத்தில் வெளியிட அமீர்கான் மாஸ்டர் பிளாஸ்டர் பிளான் போட்டுள்ளார். அதன் அறிவிப்பு தற்போது வெளியாகி சர்வதேச ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

    ஐபிஎல் டீம் வாங்கப் போறாரா

    ஐபிஎல் டீம் வாங்கப் போறாரா

    நடிகர் ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தாவை போல அமீர்கானுக்கும் ஐபிஎல் போட்டிகள் மீது ஆர்வம் வந்து விட்டதா? என்றும் லகான் படத்தின் நினைவுகளை மிதந்து வரும் அமீர்கான் புதிய ஐபிஎல் அணியை வாங்க போகிறாரா? அல்லது முதலீடு செய்யப் போகிறாரா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

    English summary
    Aamir Khan plans to unveil his Laal Singh Chaddha Trailer during IPL Final hot update announved now. Aamir Khan fans expecting it will bring a new glory to Bollywood Cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X