அமீர்கான் vs அக்‌ஷய் குமார்.. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் போட்டியில் யார் ஜெயிப்பா?

மும்பை: அத்வைத் சந்தன் இயக்கத்தில் அமீர்கான், கரீனா கபூர் மற்றும் நாக சைதன்யா நடிப்பில் இன்று வெளியாகி உள்ள லால் சிங் சத்தா திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதே சமயம், ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், புமி பெட்னேக்கர் நடித்துள்ள ரக்‌ஷா பந்தன் திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

ஆனால், இந்த இரு படங்களுக்கும் பாலிவுட்டில் மிகப்பெரிய எதிர்ப்பு நிலவுவதால், பாக்ஸ் ஆபிஸ் போட்டியில் முதல் நாளில் யார் ராஜ்ஜியம் செலுத்துவார் என்கிற கேள்விக்கு வெளியாகி உள்ள கணிப்புகளை இங்கே பார்ப்போம்..

லால் சிங் சத்தா முதல் நாள் வசூல் கணிப்பு

லால் சிங் சத்தா முதல் நாள் வசூல் கணிப்பு

ஹாலிவுட் திரைப்படமான தி ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான லால் சிங் சத்தா படம் 180 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது. அந்த படம் முதல் நாளில் 12 முதல் 15 கோடி வசூலை ஈட்டும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. அமீர்கான் படத்துக்கு முதல் நாள் வசூல் இப்படி குறைய காரணமே பாய்காட் லால் சிங் சத்தா ஹாஷ்டேக் தான் என்கின்றனர்.

ரக்‌ஷா பந்தன் முதல் நாள் வசூல் கணிப்பு

ரக்‌ஷா பந்தன் முதல் நாள் வசூல் கணிப்பு

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், தனுஷ் நடித்த அட்ரங்கி ரே ஓடிடியில் வெளியாகி ஓடாமல் போனது. இந்நிலையில், ரக்‌ஷா பந்தன் படத்தை தியேட்டரில் வெளியிட்டுள்ளார் அக்‌ஷய் குமார். இந்த ஆண்டு ஏற்கனவே வெளியான அக்‌ஷய் குமாரின் பச்சன் பாண்டே, சாம்ராட் பிருத்விராஜ் உள்ளிட்ட படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், இந்த படம் முதல் நாளில் அதிகப்படியாக 10 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர்

கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர்

கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்கள் முதல் நாளிலேயே இந்தி பெல்டில் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமீர்கான் மற்றும் அக்‌ஷய் குமாரின் படங்கள் முதல் நாளில் 15 கோடி வசூலுக்கே முக்கி வரும் நிலை ஏன் என்கிற கேள்வியும் ரசிகர்களை கவரும் வகையில் ஆக்‌ஷன் பிளாக்பஸ்டர் படமாக இரண்டுமே இல்லாதது தான் காரணம் என்கின்றனர்.

ஷாருக்கானின் பதான்

ஷாருக்கானின் பதான்


வார் திரைப்படத்தை இயக்கி கடைசியாக பாலிவுட்டுக்கு 400 கோடி வசூலை சாத்தியமாக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடித்து வரும் பதான் திரைப்படம் தான் மீண்டும் பாலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸை தலை நிமிர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X