Don't Miss!
- Automobiles
சுஸுகியும் கோதாவுல இறங்க போகுது... ஓலாவுக்கு மட்டுமல்ல ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் ஆப்பு உறுதி!
- News
இதுதான் டாடா.. A டூ Z எல்லாமே பக்கா ஸ்கெட்ச்.. மின்சார கார் சந்தையில் டாடா போடும் மெகா பிளான்
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ரூமர் காதலியுடன் விரைவில் மூன்றாவது திருமணம்... பட ரிலீஸுக்காக காத்திருக்கும் பிரபல நடிகர்!
மும்பை: சமீபத்தில் விவாகரத்தான பிரபல நடிகர் விரைவில் தனது மூன்றாவது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆமிர் கான். நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் கோலொச்சி வருகிறார் ஆமிர் கான். பிலிம் ஃபேர் விருதுகள், தேசிய விருதுகள், பத்மஸ்ரீ விருதுகள், பத்ம பூஷன் உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார் நடிகர் ஆமிர் கான்.
மாண்புமிகு
தமிழக
முதல்வர்
மு
க
ஸ்டாலின்
அவர்களுக்கு
நடிகர்
உதயாவின்
கடிதம்

முதல் திருமணம்
நடிகர் ஆமிர் கான் ரீனா தத்தாவை 1986ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களுக்கு ஜுனைத் என்ற மகனும் ஐரா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் ரீனா தத்தாவை 2002ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் ஆமிர் கான். அதன்பிறகு அவருடைய இரண்டு குழந்தைகளும் ரீனா தத்தாவே வளர்த்து வருகிறார்.

கிரண் ராவுடன் இரண்டாவது திருமணம்
ஆமிர் கான் நடித்த லகான் படத்தை அவரது மனைவி ரீனா தத்தாதான் தயாரித்தார். அப்போது அந்த படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரண் ராவுடன் ஆமிர் கானுக்கு காதல் மலர்ந்தது. இதையடுத்து 2005ஆம் ஆண்டு கிரண் ராவை திருமணம் செய்தார் நடிகர் ஆமிர் கான்.

கடந்த ஜூலையில் விவாகரத்து
அவர்கள் இருவரும் 2007 ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் ஆண் குழந்தையை பெற்றுக்கொண்டனர். அந்த குழந்தைக்கு ஆசாத் கான் என பெயரிட்டனர். இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமீர்கான் - கிரண் ராவ் இருவரும் கடந்த ஜூலை மாதம் தங்களது விவாகரத்தை அறிவித்தனர்.

புதிய காதலே காரணம்
இதுதொடர்பாக இருவரும் கூட்டாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர். அதன்படி அவர்களது மகன் ஆசாத் இருவருடனும் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே ஆமிர் கான் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிய நடிகையுடனான அவரது புதிய காதலே காரணம் என கூறப்பட்டது.

விரைவில் மூன்றாவது திருமணம்
இந்நிலையில் நடிகர் ஆமிர் கானின் மூன்றாவது திருமணம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது. அதாவது ஆமிர் கான் நடித்து வரும் லால் சிங் சதா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு சமீபத்தில் அறிவித்தது. அதனை தொடர்ந்து அவரது மூன்றாவது திருமணம் குறித்த தகவல் வெளியாகி வருகிறது.

நடிகையுடன் காதல்
அதாவது நடிகர் ஆமிர் கானுக்கும் தங்கல் பட நடிகை ஃபாத்திமா சனா ஷேய்க்கும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. அவர்களின் காதலே ஆமிர் கான் தனது மனைவியை விவாகரத்து செய்ய காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் நடிகை ஃபாத்திமா சனா ஷேய்க்கோ அல்லது ஆமிர் கானோ இதுகுறித்து இதுவரை வாய் திறக்கவில்லை.

தீயாய் பரவும் தகவல்
இந்நிலையில்
லால்
சிங்
சதா
படத்திற்கு
பிறகு
ஆமிர்
கான்
நடிகை
ஃபாத்திமா
சனா
ஷேய்க்கை
மூன்றாவதாக
திருமணம்
செய்யவுள்ளதாக
தகவல்
வெளியாகியுள்ளது.
ஆனால்
இது
எந்த
அளவுக்கு
உண்மை
என்பது
லால்
சிங்
சதா
படம்
வெளியான
பிறதான்
தெரியவரும்.