பாலிவுட்டிற்கு செல்லும் அருண் விஜய்யின் தடம்...ஹீரோ யாரு தெரியுமா ?

மும்பை : அருண் விஜய் நடிப்பில் 2019 ல் வெளியான படம் தடம். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவான இந்த படத்தை மகிழ் திருமேனி டைரக்டர் செய்திருந்தார். பாராட்டுக்களையும், ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பையும் பெற்றது.

2019 ம் ஆண்டு தமிழகத்தில் அதிக வசூலையும் பெற்ற படமாகவும் இது இருந்தது. தன்யா, ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

தெலுங்கில் ரீமேக்

தெலுங்கில் ரீமேக்

இந்த படம் சமீபத்தில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. ரெட் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தில் ராம் பொத்னேனி லீட் ரோலில் நடித்திருந்தார். இந்த படம் இந்த ஆண்டு சங்கராந்தியை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்திக்கு செல்லும் தடம்

இந்திக்கு செல்லும் தடம்

லேட்டஸ்ட் தகவலாக, தமிழ் மற்றும் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான தடம் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இந்த படத்தில் ஆதித்ய ராய் கபூர், மிருனால் தாகூர் ஆகியோர் லீட் ரோலில் நடிக்க உள்ளனர். வர்தன் கேட்கர் இயக்க உள்ள இந்த படத்தை டி சீரிஸ், சினி 1 ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க உள்ளன.

அக்டோபரில் ஷுட்டிங்

அக்டோபரில் ஷுட்டிங்

இன்னும் பெயரிடப்படாத தடம் படத்தின் இந்தி ரீமேக் வேலைகள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட உள்ளது. மிருனால் ஏற்கனவே ஃபர்ஹன் அக்தரின் Toofaan படத்தில் நடித்துள்ளார்.

Recommended Video

அல்லு அர்ஜுனை முந்திய விஜயதேவரகொண்டா.. இன்றைய டாப் 5 பீட்ஸ் வீடியோ!
ஆர்வமாக இருக்கேன்

ஆர்வமாக இருக்கேன்

தடம் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், அதில் ஆதித்யா நடிக்க உள்ளதாகவும் தாகூர் ட்விட்டரில் ஃபோட்டோவுடன் பகிர்ந்தார். ஆதித்ய கபூர் ரெடியா. தமிழில் ஹிட்டான தடம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். வர்தன் கேட்கர் இந்த படத்தை இயக்க உள்ளார் என்றார்.

வித்யா கேரக்டரில் மிருனால்

வித்யா கேரக்டரில் மிருனால்

இந்த படத்தில், தமிழில் வித்யா பிரதீப் நடித்த பெண் போலீஸ் ரோலில் தான் மிருனால் நடிக்க உள்ளார். டெல்லியில் விரைவில் படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாம். இதில் ஆதித்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம்.

மாற்றப்பட்ட ஹீரோ

மாற்றப்பட்ட ஹீரோ

முதலில் இந்த படத்தில் சித்தார்த் மல்கோத்ரா தான் லீட் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பிறகு தான் ஆதித்ய ராய் கபூர் மாற்றப்பட்டார். பல உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து தான் தடம் படத்தை ஆக்ஷன் த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X