காதலிக்காக ரூ.100 கோடியில் பிரம்மாண்ட வீடு? ட்விட்டரில் விளக்கம் கொடுத்த ஹிருத்திக் ரோஷன்!

மும்பை : நடிகர் ஹிருத்திக் ரோஷன் மும்பையில் தனது காதலிக்காக ரூ 100 கோடியில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷன் அவரின் காதல் மனைவியான சூசன் கானை 2014ம் ஆண்டு விவாகரத்து செய்தார்கள். ஹிருத்திக் ரோஷனை பிரிந்த சூசன் கான் தற்போது நடிகர் அர்ஸ்லான் கோனியை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

பாலிவுட் சினிமாவின் ஸ்மார்ட் அண்ட் ஹேன்ட்சம் ஹீரோவாக ஹிருத்திக் ரோஷன் ஏராளமான இளம் ரசிகைகளின் கனவு நாயகனாக வலம் வருகிறார். பியார் ஹே என்ற இந்தி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர். கோயி மில் கயா, க்ரிஷ், தூம் மற்றும் ஜோதா அக்பர் போன்ற மாஸ் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இருவரும் பிரிந்தனர்

இருவரும் பிரிந்தனர்

ஹிருத்திக் ரோஷன் 2000ம் ஆண்டு இண்டீரியர் டிசைனர் சூசனை திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் இருவரும் மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்த நிலையில், 2014ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்த தம்பதிக்கு ஹிரேகான், ஹிருதன் என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சபா ஆசாத்துடன் டேட்டிங்

சபா ஆசாத்துடன் டேட்டிங்

மனைவி சூசனை விவாகரத்து செய்த ஹிருத்திக் ரோஷன் நடிகையும், பாடகியுமான சபா ஆசாத்தை காதலித்து வருவதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும், ஓட்டல், ஷாப்பிங் மால் என பல இடங்களில் ஒன்றாக சுற்றித் திரிகின்றனர். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காதலிக்காக வீடு

காதலிக்காக வீடு

இந்நிலையில், நடிகர் ஹிருத்திக் ரோஷன் மும்பையில் ஜுஹு-வெர்சோவா பகுதியில் கிட்டத்தட்ட ரூ.100 கோடியில் பிரம்மாண்டமான அடுக்குமாடி வீடு ஒன்றை தனது காதலி சபா ஆசாத்திற்காக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த அபார்ட்மெண்ட் 14,15 மற்றும் 16வது தளத்தில் 38000 சதுர அடி பரப்பளவில் கடற்கரையை நோக்கி மிகவும் அழகாக உள்ளது.

விரைவில் திருமணம்

விரைவில் திருமணம்

இதில் 16வது தளத்தில் இருந்த இரண்டு படுக்கை அறைகளை உடைத்து, வீட்டிற்குள் ஒரு ஃபூஸ்பால் டேபிள், பில்லியர்ட்ஸ் டேபிள், ஜிம் போன்றவற்றை அமைத்துள்ளார். இதுவரை காதலர்களாக மட்டுமே இருந்த ஹிருத்திக் ரோஷன் சபா ஆசாத் ஜோடி திருமணம் செய்து கொண்டு இந்த வீட்டில் ஒன்றாக குடியேற இருப்பதாக கூறப்படுகிறது.

துளியும் உண்மை இல்லை

துளியும் உண்மை இல்லை

இணையத்தில் வெளியான இந்த தகவலை நடிகர் ஹிருத்திக் ரோஷன் மறுத்துள்ளார். இந்த செய்தியில் துளியும் உண்மை இல்லை. பிரபலங்கள் பற்றி வதந்திகள் பரவுவது இயல்புதான் என்பது எனக்கு தெரியும். இருப்பினும் தவறான தகவல்களைத் தவிர்ப்பது நல்லது. தவறான செய்தியை சுட்டிக்காட்டுவதும் ஒரு பொறுப்பான வேலை தான் என இணையத்தில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X