For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாலிவுட்டில் கால் பதிக்கிறார், நடிகர் மஹத்...பெண்களுக்காக ஒரு ஸ்பெஷல் செய்தி என்ன இந்த படத்தில் ?

  |

  சென்னை : திரைத்துறையில் வெகு சில நடிகர்களே மொழி எல்லைகளை கடந்து, இந்தியா முழுவதும் மிளிரும் நட்சத்திரமாக, மின்னும் திறமை பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் மின்னும் நடிகர்கள் வெற்றிகளையும், பாராட்டுக்களையும் மட்டும் குவிப்பதில்லை, ரசிகர்களின் அன்பையும் சேர்த்தே வெல்கிறார்கள்.

  அந்த வகை நடிகர்களை தனித்துவமாக்குவது, அவர்களிடம் அடுத்த வீட்டு பையன் போன்ற லுக்கும், அவர்களின் இயல்பு மிகு, நேர்த்தியான நடிப்புமே ஆகும்.

   அருண் விஜய்க்கு அக்கா மகள் சொன்ன ஸ்பெஷல் பிறந்தநாள் வாழ்த்து! அருண் விஜய்க்கு அக்கா மகள் சொன்ன ஸ்பெஷல் பிறந்தநாள் வாழ்த்து!

  இந்த வரிசையில், பாலிவுட்டில் பெரும் நட்சத்திரங்களும், திறமையான தொழில்நுட்ப கலைஞர்களும் இணையும், பிரம்மாண்ட படத்தில் இணைந்து, புதிதாக பாலிவுட்டில் தனது பயணத்தை துவங்கியுள்ளார் நடிகர் மஹத் ராகவேந்திரா.

  சோனாக்‌ஷி சின்ஹா,ஹூமா குரேஷி

  சோனாக்‌ஷி சின்ஹா,ஹூமா குரேஷி

  ஆம் இயக்குநர் சத்ரம் ரமணி இயக்கத்தில், முதாஸ்ஸர் அஜிஸ் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கும், புதிய திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நாயகனாக அறிமுகமாகிறார் மஹத் ராகவேந்திரா. மங்காத்தா புகழ் நடிகர் மஹத் ராகவேந்திரா, இப்படத்தில் நடிகர் ஜாஹிர் இக்பாலுடன் இணைந்து மற்றொரு நாயகனாக நடிக்கின்றார். பாலிவுட்டின் பெரும் நட்சத்திரங்களான சோனாக்‌ஷி சின்ஹா, ஹூமா குரேஷி ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

  முதாஸ்ஸர் அஜிஸ்

  முதாஸ்ஸர் அஜிஸ்

  இப்படத்திற்காக 30 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பை முடித்து, படப்பிடிப்பின் அற்புதமான தருணங்களால் பெரும் உற்சாகத்திலிருக்கும் நடிகர் மஹத் ராகவேந்திரா படம் குறித்து கூறியதாவது... 'முதலில் பாலிவுட்டின் பெரும் திறமையாளரான முதாஸ்ஸர் அஜிஸ் போன்றவருடன் இணைந்ததற்கு கடவுளுக்கு நன்றி. மொத்த படக்குழுவும் ஒரு குடும்பத்தில் இருப்பது போலான உணர்வையே எனக்கு தந்தார்கள்.

  ஒரு டேக்கில் நடித்து விடும்

  ஒரு டேக்கில் நடித்து விடும்

  எந்த ஒரு கதாப்பாத்திரத்திலும் தனித்துவமாக மின்னும், பாலிவுட்டின் பெரும் நட்சத்திரங்களான சோனாக்‌ஷி சின்ஹா, ஹூமா குரேஷி ஆகியோருடன் நடிக்க முதலில் எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. படப்பிடிப்பில் ஒரு எந்த ஒரு காட்சியாக இருந்தாலும், ஒரே டேக்கில் நடித்து விடும் அவர்களின் மாயாஜாலத்தை நேரில் அனுபவித்தேன். இருவருமே தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் நடித்து புகழ் பெற்றவர்கள். இருவரும் மிகப்பெரிய நட்சத்திரங்களானாலும், என்னிடம் இயல்பாக பழகி, படப்பிடிப்பில் என்னை மிக இலகுவாக உணரவைத்து, நான் நன்றாக நடிக்க நம்பிக்கை தந்தார்கள்.

  சக நடிகர் என்பதை விட

  சக நடிகர் என்பதை விட

  நான் நடிகர் ஜாஹிர் இக்பால் உடன் மற்றொரு நாயகனாக இணைந்து நடிக்கிறேன். ஆனால் இப்போது அவரை சக நடிகர் என்பதை விட, ஒரு சகோதரர் என்றே கூற முடியும். அந்தளவு படப்பிடிப்பில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். இன்னும் அவருடன் படப்பிடிப்பில் இணைந்து நடித்து கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பு தளம் எப்போதும் மிக உற்சாகமாகவே இருக்கும். இவர்களுடன் இணைந்து, இன்னும் பல சிறந்த அனுபவங்களை பெற ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  பெண்களுக்காக ஒரு செய்தி

  பெண்களுக்காக ஒரு செய்தி

  லண்டனில் 30 நாட்கள் படப்பிடிப்பை முடித்து விட்டு, தற்போது டெல்லியில் தனது கதாபாத்திரத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பில் பங்குகொண்டுள்ளார் மஹத் ராகவேந்திரா. இந்த மொத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அனுபவமும், கனவில் மிதப்பது போன்ற அழகிய தருணமாக, அவர் கொண்டாடும் நேரத்தில், இந்தி மொழியை அவர் கையாண்டது குறித்து கேட்டபோது...அதற்கு அவர் மனைவி பிராச்சி மிஸ்ராவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்றும், அவர் தான் இந்தி மொழி வழக்கில் தனக்கு டிரெய்னிங் தந்ததாகவும். அதன் பிறகு பிரத்யேகமாக இதற்கென நிறைய பயிற்சிகள் மேற்கொண்டதாகவும் கூறினார். மேலும் அவர் கூறுகையில்.. இப்படம் குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. ஆனால் இது பெண்களுக்காக ஒரு செய்தியை அழுத்தமாக கூறும் படம். இறுதியாக... இது நான் நினைத்தே பார்த்திராத, ஒரு கனவு குழுவுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். இந்த அற்புதமான அனுபவத்திற்காக கடவுளுக்கு நன்றி என்றார்.

  English summary
  Actor Mahat Entering Into Bollywood Industry a Special Update
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X