போதை பொருள் வழக்கில் கைதான ஷாருக் கான் மகன்..அந்த குழந்தை மூச்சு விடட்டும்.. பிரபல நடிகர் உருக்கம்!

மும்பை: போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஆதரவாக பிரபல நடிகர் சுனில் ஷெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

Shahrukh Khan மகன் Aryan போதை பொருள் Party நடத்தி கைதாகியுள்ளார் | Gowri Khan

சொகுசு கப்பலான எம்பிரஸ் மும்பையில் இருந்து அக்டோபர் 2ஆம் தேதி சுற்றுலா பயணிகளுடன், 3 நாள் பயணத்தை தொடங்கியது.

இக்கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி போதைப் பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பயணிகளை போல

பயணிகளை போல

இதனையடுத்து எம்பிரஸ் சொகுசு கப்பலில் பயணிகளை போல டிக்கெட் பெற்றுக்கொண்டு போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர் அந்தக் கப்பலில் ஏறினர்.

 7 மணி நேரம் சோதனை

7 மணி நேரம் சோதனை

கப்பல் நடுக்கடலை நெருங்கிய நேரத்தில் பொதுவெளியிலேயே சிலர் தடை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்துவது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த கப்பல் முழுவதும் சுமார் 7 மணி நேரம் சோதனை நடைபெற்றது.

 8 பேர் கைது

8 பேர் கைது

இந்த சோதனையில், போதை பார்ட்டியில் பங்கேற்ற சிலரிடமிருந்து காஸ்ட்லியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு மருத்துவச் சோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 ஞாயிற்றுக் கிழமை

ஞாயிற்றுக் கிழமை

இதேபோல் போதை பார்ட்டியில் பங்கேற்ற ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் 20 மணி நேர தொடர் விசாரணைக்கு பிறகு ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த ஞாயிற்றுக் கிழமை போதை தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

 நீதி மன்றத்தில் ஆஜர்

நீதி மன்றத்தில் ஆஜர்

இதனால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் மும்பை எஸ்பிளனேடு மாஜிஸ்த்ரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தரப்பில், போதைப் பொருளை வாங்கியவர்களிடம் முறையாக விசாரணை நடத்தினால் தான் அதனை விற்பவர்களைப் பற்றிய விவரங்களை அறிய முடியும் என்று வாதிட்டார்.

 அக். 7ஆம் தேதி வரை

அக். 7ஆம் தேதி வரை

மேலும் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை என்ன என்று தெரியவரும் என்றார். இதைத்தொடர்ந்து, ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், அவரது நண்பர்கள் அர்பாஸ் மெர்சன்ட், மூன்மூன் தபேச்சா உள்ளிட்டவர்களின் ஜாமீன் மனுக்களை நிராகரித்த மும்பை நீதிமன்றம் அக்டோபர் 7ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க என்சிபிக்கு அனுமதியளித்துள்ளது.

 சல்மான் கான் ஆறுதல்

சல்மான் கான் ஆறுதல்

இந்நிலையில் ஷாருக்கான் மகனுக்கு ஆதரவாக பாலிவுட் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஷாருக்கானை சந்தித்த சல்மான் கான் நெருக்கடி நேரத்தில் துணையாக இருப்போம் என ஷாருக்கானுக்கு ஆறுதல் கூறினார்.

 சுனில் ஷெட்டி ஆதரவு

சுனில் ஷெட்டி ஆதரவு

அந்த வகையில் பிரபல நடிகரான சுனில் ஷெட்டியும் ஷாருக்கான் மகனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, ஒரு இடத்தில் சோதனை நடத்தப்படும் போது, நிறைய பேர் தடுத்து வைக்கப்படுகிறார்கள். குழந்தைகள் ஏதாவது உட்கொண்டிருக்க வேண்டும் அல்லது செய்திருக்க வேண்டும் என்று நாம் கருதலாம்.

 கொஞ்சம் மூச்சு விடட்டும்

கொஞ்சம் மூச்சு விடட்டும்

நான் சொல்ல விரும்புவது, எல்லாம் புராசஸில் உள்ளது. அந்த குழந்தை கொஞ்சம் மூச்சு விடட்டும். பாலிவுட் தொடர்பாக ஏதாவது வந்தால் போதும், முழு ஊடகமும் ஒவ்வொரு கோணத்தில் எதிர்வினையாற்றத் தொடங்குகிறது. மேலும் எல்லோரும் அப்படித்தான் என்று கருதுகிறது.

 தர்பார் படத்தில் வில்லன்

தர்பார் படத்தில் வில்லன்

அந்த குழந்தைக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். உண்மையான அறிக்கைகள் வெளிவரட்டும் என்று நினைக்கிறேன். அதுவரை, அவர் ஒரு குழந்தை, அவர் நம் பொறுப்பு என்று நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார். சுனில் ஷெட்டி தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்தில் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X