கத்ரினா கைஃப் திருமணத்திற்கு சென்ற தமிழ் டாப் ஹீரோயின் யார் தெரியுமா ?

ஜெய்பூர் : பாலிவுட் பிரபலங்களான கத்ரினா கைஃப், விக்கி கெளசலின் திருமணம் மூன்று நாள் விழாவாக ராஜஸ்தானில் நடக்கிறது. டிசம்பர் 7 ம் தேதி துவங்கி டிசம்பர் 9 ம் தேதி வரை நடக்கும் இந்த திருமண விழாவில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர்.

ஜெய்பூரில் Six Senses ஓட்டலில் 700 ஆண்டுகள் பழமையான பகுதியில் தான் கத்ரினா கைஃப்பின் திருமணம் நடைபெறுகிறது. இவர்களின் திருமண அழைப்பிதழ், திருமண விருந்தில் இடம்பெறும் மெனு ஆகியன இணையத்தில் வெளியாகி செம வைரலாகின.

திருமணத்தில் மாளவிகா மோகனன்

திருமணத்தில் மாளவிகா மோகனன்

இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள தமிழ் சினிமாவை சேர்ந்த டாப் ஹீரோயின் ஒருவர் ஜெய்பூர் சென்றுள்ளார். இதனால் திருமணம் நடைபெறும் இடமே கலர்ஃபுல்லாக கலை கட்டியுள்ளது. அந்த டாப் நடிகை வேறு யாருமில்லை, மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் தான்.

மணமகன் ஃபிரண்ட்

மணமகன் ஃபிரண்ட்

மாளவிகா மோகனன், மணமகன் விக்கி கெளசலின் சிறு வயது தோழியாம். மாளவிகா, ஓணம் பண்டிகையை விக்கி கெளசல் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தான் கொண்டாடுவாராம். இந்த ஃபோட்டோக்களை அவரே பகிர்ந்துள்ளார். இந்த ஆண்டு கூட ஓணம் பண்டிகையை விக்கி குடும்பத்துடன் கொண்டாடியதை மாளவிகா பகிர்ந்திருந்தார்.

தனுஷ் பட ஹீரோயின்

தனுஷ் பட ஹீரோயின்

பேட்ட, மாஸ்டர் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களில் ஒருவராகி விட்ட மாளவிகா மோகனன், தற்போது தனுஷ் நடிக்கும் மாறன் படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் யுத்ரா என்ற படத்திலும் மாளவிகா நடித்து வருகிறார்.

மும்பையில் வரவேற்பு

மும்பையில் வரவேற்பு

விரைவில் கத்ரினா கைஃப் - விக்கி கெளசலின் திருமண வரவேற்பு மும்பையில் நடைபெற உள்ளது. இதில் பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திருமணம் காரணமாக ஓட்டல் அருகில் உள்ள கோயிலுக்கு செல்லும் பாதை மூடப்பட்டதால் வழக்கறிஞர் ஒருவர் மணமக்கள் உள்ளிட்டோர் மீது புகார் அளித்தார். இதனால் தான் திரைப்பிரபலங்கள் வரவேற்பிற்கு அழைக்கப்பட போகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X