Just In
- 4 min ago
சந்திரமுகி 2 வருமா வராதா? லாரன்ஸ் சொன்ன பதில்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
- 50 min ago
என் வீட்டு கப்போர்டில் எலும்புக்கூடுகள் இல்லை.. நான் ஏன் பயப்பட வேண்டும்.. டாப்ஸி அதிரடி!
- 1 hr ago
தங்கச் சிலையே தோற்றுப் போகும் அழகு…முன்னணி நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்!
- 1 hr ago
தோட்டாக்களை தெறிக்க விட்டு தல அஜித்… துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை !
Don't Miss!
- News
"அது"தான் பிரச்சினையா இருக்காம்.. புதுவையில் பாஜகவால் ஆட்சியமைக்க முடியுமா?
- Education
UPSC 2021: ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! யுபிஎஸ்சி அறிவிப்பு!!
- Finance
ஆன்லைனில் எப்படி ஆதார் முகவரி மாற்றம் செய்வது..!
- Sports
பெண்களுக்கு உயிரை சுமக்கும் வாய்ப்பை கடவுள் கொடுக்க காரணம்... விராட் கோலி சிலிர்ப்பு
- Lifestyle
யாரெல்லாம் பேரீச்சை பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா? இந்த நேரத்தில் பேரீச்சை சாப்பிடுவது நல்லதல்ல...!
- Automobiles
சிஎன்ஜி வெர்சனில் தயாராகும் ஸ்கோடா ரேபிட் செடான் கார்!! சோதனையில் இருப்பதாக தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மின் விசிறியில் துப்பாட்டாவால் தூக்குப் போட்டு சீரியல் நடிகை திடீர் தற்கொலை... நடிகைகள் அதிர்ச்சி
மும்பை: சின்னத்திரை நடிகை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலை செய்துவருவது அதிகரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி சின்னத்திரை உலகில் இந்த தற்கொலை சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன.
கடந்த சில மாதத்துக்கு முன் குஷால் பஞ்சாபி என்ற சின்னத்திரை நடிகர் மும்பையில் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அந்த அதிர்ச்சியில் இருந்து இந்தி சின்னத்திரை நடிகர்கள் மீள்வதற்குள் மற்றொரு தற்கொலை சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

சினிமாவில் நடிப்பதற்கு
ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் சேஜல் சர்மா. மாடலான இவர், சினிமாவில் நடிப்பதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு மும்பை வந்தார். அங்கு மீரா ரோட்டில் உள்ள ஷிவா கார்டன் பகுதியில் அபார்ட்மென்ட் ஒன்றில் தனது ஃபிரண்ட்டுடன் தங்கி நடித்து வந்தார். சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த சேஜல், தில் தோ ஹேப்பி ஹை ஜி உட்பட சில டிவி தொடர்களில் நடித்தார். இதன் மூலம் பிரபலமானார். வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.

கதவைத் திறந்ததும்
தொடர்ந்து நடித்துவந்த சேஜல், நேற்று அதிகாலை தனது அறையில் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். மற்றொரு அறையில் தங்கியிருந்த அவரது ஃபிரண்ட் காலையில் வழக்கம் போல அவர் அறைக் கதவைத் திறந்ததும் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தனது நண்பர்களுக்கும் போலீசுக்கும் தகவல் தெரிவித்தார்.

விசாரித்து வருகிறோம்
விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி மீரா ரோடு இன்ஸ்பெக்டர் சந்தீப் கதம் கூறும்போது, கடந்த ஒரு வருடத்துக்கு முன் இங்கு தனது ஃபிரண்டுடன் தங்கி இருக்கிறார் சேஜல். நேற்று அதிகாலை அவர் தற்கொலை செய்திருக்கிறார். அப்போது அவர் ஃபிரண்ட் மற்றொரு அறையில் தூங்கிக்கொண்டு இருந்திருக்கிறார். இதுபற்றி மேலும் விசாரித்து வருகிறோம் என்றார்.

சொந்த வாழ்க்கையில்
தற்கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. சொந்த வாழ்க்கையில் அவருக்கு பிரச்னை இருந்ததாகவும் அதன் காரணமாக இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தில் தோ ஹேப்பி ஹை ஜி தொடரில் அவருடன் நடித்த, அரு கே வர்மா கூறும்போது, கடந்த 10 நாட்களுக்கு முன் கூட அவரிடம் பேசினேன். அப்போது மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். அவரது தற்கொலை அதிர்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் இந்தி சின்னத்திரை நடிகர், நடிகைகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.