பாதிக்கப்பட்ட பெண்களிடம் கொஞ்சம் அனுதாபம் காட்டுங்க அக்கா.. ஷில்பா ஷெட்டிக்கு பிரபல நடிகை கோரிக்கை!

சென்னை: பாதிக்கப்பட்ட பெண்களிடம் கொஞ்சம் அனுதாபம் காட்டுங்கள் என நடிகை ஷில்பா ஷெட்டியிடம் நடிகை ஷெர்லின் சோப்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.

ஆபாச படங்களுக்கான ஆடிஷனலில் நடிகைகளை நிர்வாணமாக நடிக்க கூறியதாக அவர் மீது பல நடிகைகள் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து ராஜ் குந்த்ராவுக்கு எதிரான ஆதாரங்களை கைப்பற்றிய போலீசார் அவரை கைது செய்தனர்.

தவறாக நடந்து கொண்டார்

தவறாக நடந்து கொண்டார்

நீதிமன்ற காவலில் உள்ள ராஜ் குந்த்ராவிடம் தொடர்ந்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜ் குந்த்ரா மீது பிரபல கவர்ச்சி நடிகையான ஷெர்லின் சோப்ரா புகார் அளித்தார். மேலும் தன்னிடம் ஷில்பா ஷெட்டியின் கணவர் தவறாக நடந்து கொண்டதாகவும், ஒரு முறை தொழில் சம்பந்தமாக தன்னிடம் பேச தனது வீட்டிற்கு வந்த ராஜ் குந்த்ரா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறினார்.

பாத்ரூமுக்குள் சென்று கதவை மூடி

பாத்ரூமுக்குள் சென்று கதவை மூடி

தன்னை வலுக்கட்டாயமாக அணைத்து முத்தம் கொடுத்து ராஜ் குந்த்ரா அத்துமீறியதாக கூறிய ஷெர்லின் சோப்ரா அவரிடமிருந்து தப்பிக்க பாத்ரூமுக்குள் சென்று தான் கதவை மூடிக்கொண்டதாகவும் கூறினார். ஷெர்லின் சோப்ராவின் இந்த வாக்குமூலம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொஞ்சம் அனுதாபம் காட்டுங்கள்

கொஞ்சம் அனுதாபம் காட்டுங்கள்

ராஜ் குந்த்ரா மீது பாலியல் குற்றம் சாட்டிய ஷெர்லின் சோப்ரா, தற்போது ராஜ் குந்த்ராவின் மனைவியான ஷில்பா ஷெட்டிக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான ஷில்பா ஷெட்டிக்கு தான் உரையாற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். வணங்கும் கைகளுடன், ஷெர்லின் அந்த வீடியோவுக்கு "பாதிக்கப்பட்ட பெண்களிடம் கொஞ்சம் அனுதாபம் காட்டும்படி நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். ஒருவரின் தவறுகளை ஒப்புக்கொள்வதில் எந்தத் தீங்கும் இல்லை. " என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

ஷில்பா ஷெட்டி அனுதாபம் காட்டுகிறாரா?

ஷில்பா ஷெட்டி அனுதாபம் காட்டுகிறாரா?

ஷில்பா ஷெட்டி ரியாலிட்டி ஷோவில் வெளியிட்ட சில அறிக்கைகளை சுட்டிக்காட்டி நடிகை ஷெர்லின் சோப்ரா தனது இரண்டு நிமிட கிளிப்பில் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது, ராணி லக்ஷ்மி பாயைப் புகழ்வது பற்றி ஷில்பாவின் அறிக்கைகளை கேள்விக்குள்ளாக்கிய ஷெர்லின், ராஜ் குந்த்ராவின் ஆபாசப் படத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகை அனுதாபம் காட்டுகிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களும் அதில் அடங்குவார்களா?

பாதிக்கப்பட்டவர்களும் அதில் அடங்குவார்களா?

"வாழ்க்கையின் அனைத்து சவால்களையும் தைரியமாக எதிர்கொள்ளும் அனைத்து பெண்களுக்கும் நீங்கள் தலைவணங்குவதாக கூறினீர்கள். பல்வேறு காவல் நிலையங்களில் தங்கள் அறிக்கைகளை தைரியமாக பதிவு செய்த உதவியற்ற பாதிக்கப்பட்டவர்களும் அதில் அடங்குவார்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் ஷெர்லின் சோப்ரா. ஷில்பா ஷெட்டியின் ஃபாலோயர்ஸ் தன்னை சமூக ஊடகங்களில் துன்புறுத்துவதாகவும் ஷெர்லின் சோப்ரா தெரிவித்துள்ளார்.

உங்கள் ஃபாலோயர்ஸ் ட்ரோல் செய்கிறார்கள்

உங்கள் ஃபாலோயர்ஸ் ட்ரோல் செய்கிறார்கள்

இந்த நாட்களில் நான் சமூக ஊடகங்களில் ஏதாவது பதிவு செய்தாலே, உங்களைப் பின்தொடர்பவர்கள் என் படங்கள் போட்டோஷாப் செய்யப்பட்டவை என்று கூறி என்னை ட்ரோல் செய்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு நான் விசுவாசத்தைப் பற்றிய உங்கள் பதிவைப் படித்தேன், அது எனக்கு மிகவும் நன்றாக இருந்தது. நம்பிக்கை மிகவும் சக்திவாய்ந்த சக்தியாக நான் உணர்கிறேன், அது மிகவும் நம்பிக்கையற்ற சூழ்நிலைகளில் கூட வெளிச்சத்தை பரப்ப முடியும்.

தயவுசெய்து சில அனுதாபங்களைக் காட்டுங்கள்

தயவுசெய்து சில அனுதாபங்களைக் காட்டுங்கள்

ஒரு பெண்ணாக இருப்பதால், நீதிக்காக வலியுறுத்தி வரும் அனைத்து ஆதரவற்ற சிறுமிகளிடமும் தயவுசெய்து சில அனுதாபங்களைக் காட்டுங்கள். அவர்கள் நாட்டின் சட்டத்தில் முழு நம்பிக்கை வைத்துள்ளனர் என ஷெர்லின் சோப்ரா தெரிவித்துள்ளார். ஷெர்லின் சோப்ராவின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கணவரை பிரியும் ஷில்பா ஷெட்டி

கணவரை பிரியும் ஷில்பா ஷெட்டி

இதனிடையே ஆபாச பட வழக்கில் சிக்கியுள்ள தனது கணவர் ராஜ் குந்த்ராவை ஷில்பா ஷெட்டி பிரிய உள்ளதாக ஷில்பா ஷெட்டியின் நண்பர் தெரிவித்துள்ளார். குழந்தைகளின் நலனுக்காக ராஜ் குந்த்ராவை ஷில்பா பிரிய உள்ளதாகவும், அவருடைய சொத்தில் இருந்து ஒரு பைசா கூட வேண்டாம் என ஷில்பா ஷெட்டி முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X