ஆர்யானுக்கு ஜாமின் வழங்கிய மும்பை ஐகோர்ட்....டிரெண்டிங்கில் தெறிக்க விட்ட ரசிகர்கள்

மும்பை : பாலிவுட் சூப்பர் ஹீரோ ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் அக்டோபர் 3 ம் தேதி, மும்பை சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஆர்யான், அவரது நண்பர்கள் உள்ளிட்ட 7 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பிறகு மும்பை சிறையில் அடைக்கப்பட்டனர். ஷாருக்கான் மகனை வெளியில் கொண்டு வர பலமுறை முயற்சித்தும் அது முடியாமல் போனது. ஆர்யான் உள்ளிட்டோருக்கு ஜாமின் வழங்க தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

கடத்த கும்பலுடன் தொடர்பு

கடத்த கும்பலுடன் தொடர்பு

அதோடு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் ஆர்யானுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆர்யானின் வாட்ஸ்ஆப் சேட் அடிப்படையில் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக என்சிபி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அனன்யா பாண்டே, ஷாருக்கான் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அனன்யா பாண்டே விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

தூங்காமல் தவித்த ஷாருக்கான்

தூங்காமல் தவித்த ஷாருக்கான்

இதற்கிடையில் சிறையில் ஆர்யான் கான், தூங்காமால், சிறை உணவுகளை சாப்பிட மறத்து வந்தார். வீட்டில் ஷாருக்கான் மற்றும் கவுரி கானும் மகனை வெளியில் எடுக்க முடியாமல் இரவு நேரங்களை தூங்காமல் கழித்தனர். சரியாக சாப்பிடாமல் இருந்துள்ளனர். மகன் வீட்டிற்கு வரும் வரை இனிப்பு பதார்த்தங்கள் எதையும் செய்யக் கூடாது என வீட்டில் உள்ள பணியாளர்களுக்கு கவுரி கான் உத்தரவிட்டுள்ளனர்.

Recommended Video

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்!
கண் கலங்கிய ஆர்யான்

கண் கலங்கிய ஆர்யான்

மகன் சிறையில் இருந்ததால் படப்பிடிப்புக்கள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு, வீட்டிலேயே இருந்து வருகிறார் ஷாருக்கான். சமீபத்தில் சிறை அதிகாரிகள் ஆர்யான் கானை வீடியோ காலில் 10 நிமிடங்கள் பெற்றோருடன் பேச அனுமதித்த போது ஆர்யான் கான் கண்கலங்கி அழுததாக கூறப்படுகிறது.

ஜாமின் வழங்கிய ஐகோர்ட்

ஜாமின் வழங்கிய ஐகோர்ட்

ஆர்யான் கானுக்கு தொடர்ந்து ஜாமின் மறுக்கப்பட்டதால் அக்டோபர் 23 ம் தேதி மகனை சிறையில் நேரில் சென்று சந்தித்தார் ஷாருக்கான். கீழ் கோர்ட்டில் தொடர்ந்து ஜாமின் மறுக்கப்பட்டதால், மும்பை ஐகோர்ட்டில் ஆர்யான் கானின் ஜாமினுக்காக முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இதில் ஆர்யான் கான் தரப்பு வாதங்களை ஏற்ற கோர்ட், ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

டிரெண்டிங்கில் ஆர்யான் கான்

டிரெண்டிங்கில் ஆர்யான் கான்

இந்நிலையில் Aryankhan Bail என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகி உள்ளது. ஷாருக்கானின் ரசிகர்கள் இந்த ஹாஷ்டேக்கை உருவாக்கி, டிரெண்டிங் ஆக்கி உள்ளனர். ஆர்யான் கானின் ஜாமின் மனு ஒவ்வொரு முறை விசாரகை்கு வரும் போதும் ஷாருக்கானின் ரசிகர்கள் ஆர்யான் கான் பெயில் என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

ஜாமினை எதிர்க்கும் நெட்டிசன்கள்

ஜாமினை எதிர்க்கும் நெட்டிசன்கள்

ஆர்யான் கானுக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, NoBailOnlyJail என்ற ஹாஷ்டேக்கையும் சிலர் உருவாக்கி, டிரெண்டிங் ஆக்கினர். சிறையில் மற்ற கைதிகளை போலவே ஆர்யான் கானையும் நடத்த வேண்டும், விஐபி சலுகை ஏதும் வழங்கப்பட கூடாது என ஏராளமானோர் வலியுறுத்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X