twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கல்வான் பள்ளத்தாக்கு மோதல்.. 20 வீரர்கள் வீரமரணமடைந்த சம்பவம்.. சினிமாவாக்கும் பிரபல அதிரடி ஹீரோ!

    By
    |

    சென்னை: கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா- சீனா மோதிக்கொண்ட பிரச்னையை மையமாக வைத்து படம் எடுக்க இருப்பதாக பிரபல ஹீரோ தெரிவித்துள்ளார்.

    கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கடந்த மாதம் 15, 16 ஆம் தேதியில் இந்திய, சீன படைகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

    இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர்.

    டிக்டாக் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான மாளவிகா மோகனன்.. பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!டிக்டாக் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான மாளவிகா மோகனன்.. பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

    இயக்குனர் மேஜர் ரவி

    இயக்குனர் மேஜர் ரவி

    சீன தரப்பில் 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த எண்ணிக்கையை சீனா உறுதிப்படுத்தவில்லை. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சீன படையினர் அத்து மீறியதாக இந்தியாவும், இந்திய வீரர்கள் அத்துமீறியதாக சீனாவும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து சினிமா இயக்குவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார், மேஜர் ரவி.

    போர் பற்றிய படங்கள்

    போர் பற்றிய படங்கள்

    இவர் தமிழில், ஜீவா, மோகன்லால் நடித்த அரண் படத்தை இயக்கியவர். ராஜீவ்காந்தி கொலையாளிகளை பிடிக்கும் சம்பவத்தை மையமாக வைத்து, மிஷன் 90 டேஸ் என்ற படத்தையும் இயக்கினார். இதில் மம்மூட்டி, ராணுவ மேஜராக நடித்திருந்தார். இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. அடுத்து குருஷேத்ரா, கந்தகார் உட்பட சில போர் படங்களை இயக்கி உள்ள இவர், டிரைவிங் லைசன்ஸ், வரனே அவஷியமுண்டு உட்பட சில படங்களில் நடித்தும் உள்ளார்.

    சீனா கவலை

    சீனா கவலை

    அவர், கூறும்போது, படத்துக்கு பிரிட்ஜ் ஆன் கல்வான் என்று டைட்டில் வைத்துள்ளேன். கல்வான் ஆற்றில் 60 மீட்டர் நீளத்துக்கு கட்டிய பாலத்தை மையப்படுத்தி கதை இருக்கும். இந்த பாலம்தான் இப்போதைய மோதலுக்கும் காரணம். ஏனென்றால், துருப்புகளை கொண்டு செல்வதற்கு இந்தப் பாலம் முக்கியமானதாக அமைந்துவிட்டது. எல்லைப் பகுதியில் உள்ள அக்‌ஷாய் சின்-ஐ இந்தியா மீண்டும் கைப்பற்றிவிடுமோ என்ற சீனா கவலைப்படுகிறது' என்று கூறியிருந்தார்.

    நடிகர் அஜய்தேவ்கன்

    நடிகர் அஜய்தேவ்கன்

    இந்நிலையில், கல்வான் பிரச்னையை மையமாக வைத்து தானும் படம் எடுக்கப் போவதாக, பிரபல இந்தி நடிகர் அஜய்தேவ்கன் தெரிவித்துள்ளார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தை அவரே தயாரிக்கிறார். நடிகர், நடிகைகள், இயக்குனர் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை. இத்தகவலை பாலிவுட் சினிமா வர்த்தக ஆய்வாளர் தாரன் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார்.

    English summary
    Ajay Devgn announces film on 20 soldiers martyred in Galwan Valley clash
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X