கால்பந்தாட்ட பயிற்சியாளரின் உண்மைக்கதை “Maidaan“... ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மும்பை : பாலிவுட் ஸ்டார் அஜய் தேவ்கன் நடிக்கும் மைதான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
இத்திரைப்படத்தில், பிரியாமணி, கஜ்ராஜ் ராவ் மற்றும் பெங்காலி நடிகர் ருத்ரனில் கோஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

கால்பந்தின் பொற்காலம்
இந்திய கால்பந்தின் பொற்காலம் என்றும் அழைக்கப்பட்ட 1952ம் ஆண்டு முதல் 1962ம் ஆண்டுக்கு இடையில் நடந்த உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் மைதான். இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராகவும் மேலாளராகவும் பணியாற்றிய சையத் அப்துல் ரஹ்மான் உண்மைக் கதையிலிருந்து ஈர்க்கப்பட்ட படம் இதுவாகும். இப்படத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளராக தேவ்கன் நடித்துள்ளார்.

மைதான்
இப்படத்தில், பிரியாமணி, கஜ்ராஜ் ராவ் மற்றும் பெங்காலி நடிகர் ருத்ரனில் கோஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். அமித் ரவிந்தர்நாத் சர்மா இப்படத்தை இயக்கியுள்ளார். சைவின் குவாட்ராஸின் திரைக்கதையிலிருந்து புகழ் பெற்ற ரித்தேஷ் ஷா இப்படத்திற்கு வசனங்களை எழுதியுள்ளார். மேலும் இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர்.

2022 ஜூன் 3 ரிலீஸ்
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமானதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது, நிலைமை ஓரளவு சீரடைந்து வருவதால், இத்திரைப்படம் 2022 ஜூன் 3 உலகம் முழுவதும் திரையிடப்படும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

உண்மைக்கதை
'மிஸ்டர் இந்தியா', 'நோ என்ட்ரி', 'ஜுடை', 'வாண்டட்' மற்றும் 'மாம்' உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்த போனி கபூர், "மைதான்" படத்தின் புதிய வெளியீட்டு தேதியை தனது ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். அதில், ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் அறியாத உண்மை கதை தான் 'மைதான்', உலகம் முழுவதும் ஜூன் 3, 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அவர் எழுதினார்.

ஒவ்வொருவரையும் கவரும்
அதேபோல தேவ்கனும் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த படம் ஒவ்வொரு இந்தியரையும் கவரும் என்று நம்புகிறேன் என்று பகிர்ந்துள்ளார். 'மைதான்', ஒவ்வொரு இந்தியருக்கும் எதிரொலிக்கும் ஒரு கதை, நான் மிகவும் உறுதியாக உணரும் படம். உங்கள் கேலன்டரில் தேதியை குறித்துவைத்துக்கொள்ளுங்கள் 3 ஜூன் 2022 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது என்று அவர் ட்வீட்டில் கூறினார்.


Click it and Unblock the Notifications