Just In
- 3 hrs ago
பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் !
- 3 hrs ago
வலிமை நாயகி ஹூமா குரேஷியின் ஹாலிவுட் பட டிரைலர் ரிலீஸ்
- 3 hrs ago
காட்டுப்பேச்சியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து… நன்றி கூறிய தனுஷ்!
- 3 hrs ago
நெகடிவ் ஆன விஷயத்தை சந்தோஷமாக பகிர்ந்த ஆலியா...ரசிகர்கள் மகிழ்ச்சி
Don't Miss!
- News
ராஜஸ்தானில் 16-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்.. எதெற்கெல்லாம் தடை; விலக்கு தெரியுமா?
- Automobiles
வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா? வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்!!
- Sports
வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... அதிரடி காட்டும் எஸ்ஆர்எச் பௌலர்
- Finance
ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.. நகை வாங்கும்போது பார்த்து வாங்குங்க..!
- Lifestyle
கசகசா பாயாசம்
- Education
மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம்! தேர்வு கிடையாது! மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடிகர் அக்ஷய் குமாருக்கும் கொரோனா பாதிப்பு.. நாடு முழுவதும் தீவிரமடைகிறது கொரோனா!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா பாதிப்பு ருத்ர தாண்டவத்தை நிகழ்த்திய நிலையில், மீண்டும் அதன் வீரியம் தீவிரமடைந்து வருகிறது.
ஆறுதல் பிச்சைக்கு கை நீட்டாமல்.. நல்லாட்சிக்கு கை நீட்டுவோம்.. நடிகர் பார்த்திபன் ட்வீட்!
ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

தீவிரமடையும் கொரோனா
கொரோனா பரவல் கடந்த ஆண்டு இறுதியில் குறையத் தொடங்கியதை தொடர்ந்து நாடு முழுவதும் போடப்பட்ட லாக்டவுன் முழுமையாக தளர்வு செய்யப்பட்டது. படப்பிடிப்புகளுக்கும், திரையரங்குகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டன. இந்நிலையில், மீண்டும் நாடு முழுவதும் கொரோனாவின் தீவிரம் அதிகமாகி வருகிறது.

குறைந்தது கட்டுப்பாடு
மக்களுக்கு கொரோனா மீது இருந்த பயம் முற்றிலுமாக நீங்கி, மாஸ்க் அணியாமலும் உரிய பாதுகாப்பை மேற்கொள்ளாமலும் பல இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். இதனால், குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

பிரபலங்களுக்கு பாதிப்பு
மீண்டும் சினிமா படப்பிடிப்புகளில் பிசியாகி உள்ள முன்னணி நடிகர்களுக்கு கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வருகிறது. சமீபத்தில் தான் பாலிவுட் இளம் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் உள்ளிட்ட பிரபலங்களுக்கு கொரோனா பரவியது. கோலிவுட்டில் சூர்யா உள்ளிட்ட பிரபலங்களுக்கும் கொரோனா பரவியது.

அக்ஷய் குமாருக்கு கொரோனா
லாக்டவுன் நேரத்தில் கூட பிரத்யேக பர்மிஷன் பெற்று வெளிநாட்டில் பெல் பாட்டம் ஷூட்டிங்கை நடத்திய அக்ஷய் குமார், சமீபத்தில் தனுஷின் இந்தி படமான அட்ரங்கி ரே படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டதாக ட்வீட் போட்டார். இந்நிலையில், தற்போது தனக்கு கொரோனா பரவி இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சீக்கிரமே திரும்பிவிடுவேன்
கொரோனா பரவல் காரணமாக வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், சீக்கிரமாகவே மீண்டும் ஆக்ஷனில் இறங்குவேன் என்றும் அக்ஷய் குமார் தனது ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ட்வீட் போட்டுள்ளார். அக்ஷய் குமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அறிந்த ரசிகர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.