அக்ஷய் குமாருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு...கை நழுவி போன கென்ஸ் வாய்ப்பு

மும்பை : பாலிவுட் டாப் ஹீரோ அக்ஷய் குமாருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கென்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை அவர் இழந்துள்ளார்.

பாலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் அக்ஷய் குமார். 1987 ம் ஆண்டு ஆஜ் படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமான அக்ஷய் குமார், 100 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 30 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் இதுவரை அக்ஷய் குமார் நடித்த 113 படங்களில் 52 படங்கள் கமர்ஷியல் ஹிட் கொடுத்த படங்களாகும்.

ஒரே நேரத்தில் 7 படங்கள்

ஒரே நேரத்தில் 7 படங்கள்

அக்ஷய் குமார் நடித்த பச்சன் பாண்டே படம் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் நடித்த பிருத்விராஜ் படம் ரிலீசிற்கு தயாராகி வருகிறது. ரக்ஷா பந்தன், ராம் சேது, ஓ மை காட் 2, சூரரைப் போற்று இந்தி ரீமேக் உள்ளிட்ட 7 படங்களில் தற்போது நடித்து வருகிறார் அக்ஷய் குமார். இவர் இரண்டு தயாரிப்பு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

 கென்ஸ் விழாவில் இந்திய விஐபிக்கள்

கென்ஸ் விழாவில் இந்திய விஐபிக்கள்

மே 17, 18 ஆகிய தேதிகளில் ஃபிரான்ஸில் நடக்கும் 75வது கென்ஸ் திரைப்பட திருவிழாவில் இந்திய திரையுலகின் சார்பில் கலந்து கொள்ளும் நடிகர் - நடிகைகள் பட்டியலில் அக்ஷய் குமாரின் பெரும் இடம்பெற்றிருந்தது. கென்ஸ் திரைப்பட விழாவின் துவக்க விழாவில் ரெட் கார்பெட் நிகழ்வில் ஏ.ஆர்.ரஹ்மான், மாதவன், நவாசுதீன் சித்திக், தமன்னா, சேகர் கபூர், பூஜா ஹெக்டே உள்ளிட்டோருடன் அக்ஷய் குமாரும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அக்ஷய்க்கு கொரோனா தொற்று

அக்ஷய்க்கு கொரோனா தொற்று

ஆனால் தனக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கென்ஸ் விழாவில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார் அக்ஷய் குமார். அவர் தனது ட்விட்டர் பதில், இன்று காலை எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக என்னை நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். தேவையான மருத்துவ ஆலோசனையின் பேரில் மருந்துகள் எடுத்துக் கொண்டு வருகிறேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து உங்களை பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். மிக விரைவில் திரும்பி வருவேன் என குறிப்பிட்டுள்ளார்.

கென்ஸ் விழாவை மிஸ் பண்ணுறேன்

கென்ஸ் விழாவை மிஸ் பண்ணுறேன்

மற்றொரு பதிவில், இந்திய சினிமாவை சர்வதேச அளவிற்கு எடுத்துச் செல்ல வழிவகுக்கும் கென்ஸ் 2022 விழா வரை இந்திய சினிமா சார்பில் பங்கேற்க இருந்தேன். ஆனால் வருத்தமளிக்கும் வகையில் கொரோனா பாசிடிவ் ஆகி உள்ளது. இதனால் என்னால் கலந்து கொள்ள முடியாது. இதை தவற விடுகிறேன். இருந்தாலும் இதில் கலந்து கொள்ள உள்ள மற்ற குழுவினருக்கு என் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது முறையாக கொரோனா

இரண்டாவது முறையாக கொரோனா

அக்ஷய் குமாருக்கு தற்போது இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் 2021 ம் ஆண்டு ஏப்ரல் மாதமும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X