Just In
- 9 hrs ago
பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் !
- 9 hrs ago
வலிமை நாயகி ஹூமா குரேஷியின் ஹாலிவுட் பட டிரைலர் ரிலீஸ்
- 9 hrs ago
காட்டுப்பேச்சியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து… நன்றி கூறிய தனுஷ்!
- 10 hrs ago
நெகடிவ் ஆன விஷயத்தை சந்தோஷமாக பகிர்ந்த ஆலியா...ரசிகர்கள் மகிழ்ச்சி
Don't Miss!
- News
அட கொடுமையே.. ராஜஸ்தான் மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் திருட்டு!
- Sports
சர்வதேச போட்டிகள்ல மட்டுமில்லீங்க... ஐபிஎல்லிலும் சிறப்புதான்... மீண்டும் நிரூபித்த டேவிட் வார்னர்
- Automobiles
வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா? வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்!!
- Finance
ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.. நகை வாங்கும்போது பார்த்து வாங்குங்க..!
- Lifestyle
கசகசா பாயாசம்
- Education
மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம்! தேர்வு கிடையாது! மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தனுஷ் படத்தில் அக்ஷய் குமாருக்கு இந்த ரோல் தானா? படப்பிடிப்பு ஓவர் என போட்டோவுடன் ட்வீட்!
மும்பை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள பாலிவுட் படமான அட்ரங்கி ரே படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக நடிகர் அக்ஷய் குமார் ட்வீட் போட்டுள்ளார்.
ராஞ்சனா படம் மூலம் தனுஷை பாலிவுட்டில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஆனந்த் எல். ராய்.
ஷாருக்கானின் ஜீரோ படத்தைத் தொடர்ந்து அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் நடிப்பில் அட்ரங்கி ரே திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

100 கோடி சம்பளம்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தில் வில்லனாக மிரட்டியவர் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். பாலிவுட்டில் பெல் பாட்டம், சூர்யவன்ஷி, அட்ரங்கி ரே, பிருத்விராஜ், பச்சன் பாண்டே என ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். ஒவ்வொரு படத்திற்கும் சுமார் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார் அக்ஷய் குமார்.

தனுஷ் படம்
ஸ்ட்ரேஞ்சர்ஸ், மாதவனின் தனு வெட்ஸ் மனு உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் எல். ராய் கடந்த 2013ம் ஆண்டு தனுஷின் பாலிவுட் அறிமுக படமான ராஞ்சனாவை இயக்கினார். தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் வெளியான அந்த திரைப்படம் பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழில் அம்பிகாபதி எனும் பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது.

மீண்டும் பாலிவுட் படம்
ராஞ்சனா படத்தின் வெற்றிக்கு பிறகு அமிதாப் பச்சன் உடன் இணைந்து ஷமிதாப் படத்தில் தனுஷ் நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் தனுஷ் மீண்டும் ஆனந்த் எல். ராய் இயக்கி வரும் அட்ரங்கி ரே எனும் பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். தனுஷின் போர்ஷன் சில மாதங்களுக்கு முடிந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன ரோல்
தனுஷ், சாரா அலி கான் நடித்து வரும் அட்ரங்கி ரே படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமாரும் நடித்து வருகிறார். தற்போது மேஜிக் மேன் லுக்கில் அக்ஷய் குமார் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக அறிவித்துள்ளார். மேஜிக் மேன் கதாபாத்திரத்தில் தான் அக்ஷய் குமார் இந்த படத்தில் நடித்துள்ளாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் இசை
ராஞ்சனா படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கும் இசை ஏ.ஆர். ரஹ்மான் தான். தற்போது அக்ஷய் குமார் பதிவிட்டுள்ள தனது ட்வீட்டில் நடிகர் தனுஷ், நடிகை சாரா அலி கான், இயக்குநர் ஆனந்த் எல். ராய் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பலருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.