இப்போதைக்கு திருமணம் இல்லை… பாலிவுட் காதல் ஜோடியின் திடீர் முடிவு !
மும்பை : பாலிவுட் நட்சத்திரங்களான ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளனர்.
ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களின் திருமணம் இந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் இந்த காதல் ஜோடி தற்போது திருமணம் இல்லை என்று கூறியுள்ளதால். இவர்களின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

ரன்பீர், ஆலியா காதல்
பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் ரன்பீர் கபூர் , ஆலியா பட். ரன்பீர் கபூர் ரஷிகபூரின் மகன் ஆவார். ஆலியா பட்டும் இயக்குனர் மகேஷ் பட்டின் மகள் ஆவார். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்கள்.

திருமணம் தள்ளிவைக்கப்பட்டது
இவர்களின் திருமணம், 2019-லேயே நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், புற்றுநோய்க்காக நியு யார்க்கில் ரன்பீரின் தந்தை ரிஷி கபூர் சிகிச்சை பெற்று வந்ததால் திருமண ஏற்பாடுகள் தள்ளி வைக்கப்பட்டன. இந்தாண்டு இறுதியில் அதாவது டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தனர்.

கால்ஷீட் கொடுக்கவில்லை
ரன்பீர் மற்றும் ஆலியா இருவரும் ஜனவரியில் எந்த திரைப்படத்திற்கும் கால்ஷீட் கொடுக்கவில்லை. ரன்பீரும் 'அனிமல்' படத்தின் ஷூட்டிங் ஷெட்யூலைத் தள்ளி வைத்தார். மேலும், ஆலியாவும் ஜனவரியிலும் கங்குபாய் கத்தியவாபடி திரைப்படத்தை ஜனவரியில் தொடங்க உள்ளார். இதனால், நவம்பர் மற்றும் டிசம்பரில் இவர்களின் திருமணம் நடைபெறும் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

2022ல் திருமணம்
இந்நிலையில், ஆலியாவும் ரன்பீரும் தங்கள் திருமணத்தை பிரமாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளதாவும், திருமண விஷயத்தில் அவசரப்படப் போவதில்லை என்றும் தெளிவாக யோசித்து முடிவு எடுக்க இருப்பதாகவும், 2022ம் ஆண்டு நிச்சயம் திருமணம் நடக்கும் என்றும் இருவரும் தெரிவித்துள்ளனர். இவர்களின் இந்த முடிவால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

அதிர்ஷ்ட மோதிரம்
இந்நிலையில், நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், முகத்தை இலையால் மூடிக்கொண்டு. தான் அணிந்து இருக்கும் மோதிரத்தை காட்டி உள்ளார். அந்த மோதிரத்தில் 8 என பொறிக்கப்பட்டுள்ளது. 8 என்பது ரன்பீர் கபூரின் அதிர்ஷ்ட எண் மற்றும் அவர் கால்பந்து விளையாடும் போது ஜெர்சி எண் 8 ஐ அணிந்திருப்பார். இந்த புகைப்படம் பல லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











