twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன்... கொரோனா பாதிப்புக்கு ரூ.1 கோடி நிதியளித்த பாலிவுட் நடிகர்

    |

    மும்பை : கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தியுள்ள பாதிப்பில் இந்தியா மோசமான விளைவுகளை சந்தித்து வருகிறது.

    தினந்தோறும் ஏறக்குறைய 4,000 பேர் உயிழந்து வருகின்றனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர்.

    அஜித்தின் அடுத்த 3 படங்கள் இது தானா...கொண்டாட்டத்தில் ரசிகர்கள் அஜித்தின் அடுத்த 3 படங்கள் இது தானா...கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

    இந்நிலையில் நடிகர்கள், பிரபலங்கள் கொரோனா பாதிப்பிற்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.

    இரண்டாவது அலை

    இரண்டாவது அலை

    கொரோனாவின் இரண்டாவது அலை மோசமான விளைவுகளை இந்தியாவில் ஏற்படுத்தி வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். ஏராளமானோர் ஆக்சிஜன் இல்லாமல் அவதியுறுவதாக தகவல்கள் கிடைக்கின்றன.

    ஏராளமானோர் நிதியுதவி

    ஏராளமானோர் நிதியுதவி

    இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆக்சிஜன் சப்ளை மற்றும் மருந்து சப்ளை போன்றவற்றிற்காக ஏராளமானோர் நிதியுதவி செய்து வருகின்றனர். இந்தியா முழுவதிலும் ஏராளமான நடிகர்கள், பிரபலங்கள் போன்றவர்கள் தொடர்ந்து இந்த நேரத்தில் அரசுக்கு கைகொடுத்து வருகின்றனர்.

    ரூ.1 கோடி நிதியுதவி

    ரூ.1 கோடி நிதியுதவி

    இந்நிலையில் பாலிவுட் நடிகர் அனில் கபூர் மேன்கைண்ட் பார்மா நிறுவனத்துடன் இணைந்து மகாராஷ்டிராவின் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் இத்தகைய சிறப்பான பணிக்காக மேன்கைண்ட் பார்மாவுடன் கைகோர்த்தது சிறப்பானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    கைகோர்த்த அனில் கபூர்

    கைகோர்த்த அனில் கபூர்

    மேன்கைண்ட் பார்மா சமூக அளவில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு சிறப்பான உதவிகளை செய்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இதனிடையே மேன்கைண்ட் நிறுவனத்துடன் இணைந்து இத்தகைய உதவியை செய்துள்ள அனில் கபூருக்கு அதன் மேனேஜிங் டைரக்டர் நன்றி தெரிவித்துள்ளார்.

    கைகோர்க்கும் நடிகர்கள்

    கைகோர்க்கும் நடிகர்கள்

    அனில் கபூர் மட்டுமின்றி சோனு சூட், பூமி பத்னேகர், பிரியங்கா சோப்ரா, அமிதாப் பச்சன், டிவிங்கிள் கண்ணா ஆகியோரும் கொரோனா பாதித்தவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். சிலர் நிதியுதவி செய்து வரும் நிலையில், சிலர் என்ஜிஓ மூலமாக களப்பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    English summary
    A donation of 1 crore donated to CM Relief Fund of Maharashtra is our small gesture -Anil Kapoor
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X