Just In
- 11 hrs ago
பிரபலங்களின் பாராட்டு மழையில் அன்பிற்கினியாள்.. ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைபோடு போடுகிறது!
- 11 hrs ago
இந்தியில் ரீமேக் ஆகும் அருவி... கதாநாயகி யார் தெரியுமா?
- 11 hrs ago
மணப்பெண் கோலத்தில் பரதேசி ஹீரோயின்... தேவதை மாதிரியே இருக்காங்க!
- 12 hrs ago
கிரிக்கெட் வீரர் பும்ராவை திருமணம் செய்யப் போகிறாரா தனுஷ் பட நடிகை? பரபரப்பு தகவல்!
Don't Miss!
- News
அந்த "பைபாஸ்" உரையாடல்.. இரவோடு இரவாக ஒப்புக்கொண்ட காங்... திமுக "டீல்" முடிந்தது எப்படி.. டிவிஸ்ட்
- Lifestyle
வார ராசிபலன் 07.03.2021 முதல் 13.03.2021 வரை - புதிய தொழில் தொடங்க இது சாதகமான காலமில்லை…
- Automobiles
மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300!! மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது?
- Sports
அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்ஷர் பட்டேல்
- Finance
டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிகினி போட்டோவால் வந்த வினை...பிரபல இயக்குனரின் மகளுக்கு நடந்த விபரீதம்
மும்பை : பாலிவுட் பிரபல இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யாப், பல்வேறு முக்கிய விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டதால் மிக கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். இதனால் கடந்த ஆண்டு அவர் தனது சமூக வலைதள கணக்குகளை நீக்கினார்.

2019 ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நாஜக வெற்றி பெற்றதால், பிரதமர் மோடிக்கு எதிரான விமர்சனங்களை நிறுத்தாவிட்டால் அனுராக்கின் மகள் ஆலியாவை பலாத்காரம் செய்ய போவதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக அனுராக் போலீசிலும் புகார் அளித்திருந்தார்.
சர்ச்சை நடிகர் என பெயர் வாங்கிய அனுராக்கின் மகளும் சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கினார். அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் எதிர்மறை விமர்சனங்களையும் பற்றி ஆலியாவே பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
அனுராக்கின் மகள் ஆலியா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி படங்களையும், உள்ளாடை தெரியும் வகையிலான கவர்ச்சி போட்டோவையும் வெளியிட்டார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சிலர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனை தான் எப்படி எதிர்கொண்டேன் என ஆலியா யூட்யூப்பில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில், சமூக வலைதளங்களில் ஏராளமான எதிர்ப்பு கருத்துக்கள் எழுந்தன. நான் ரொம்ப சென்ஷிடிவ்வான ஆள். சிறிய எதிர்ப்புக்கள் கூட என்னை கடுமையாக பாதித்தன.
பலரின் மோசமான கருத்துக்களால் நாள் முழுவதும் அழுது கொண்டே இருந்தேன். இது போன்ற பதிவை வெளியிட்டதற்கு நான் இந்தியன் என சொல்லிக் கொள்வதற்கே பெரிய அவமானப்பட வேண்டும் என பலர் கூறினர்.
சிலர் எனக்கு பலாத்காரம், கொலை மிரட்டல் விடுத்தனர். என்ன ரேட் என கேட்டனர். சிலர் என்னை விலைமாது என்றனர். இந்த படங்களால் இது போன்ற பல பிரச்னைகளையும், எதிர்ப்புகளையும் சந்தித்தேன். இதனால் நிறையவே அழுதேன் என்றார்.